1. செய்திகள்

வரத்து அதிகரிப்பால் கடும் சரிவில் முருங்கை விலை!

R. Balakrishnan
R. Balakrishnan
Moringa Price

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயிலில் முருங்கை மார்கெட்டுக்கு கடந்த வாரம் 5 டன் வரத்து மட்டுமே வந்த நிலையில், கிலோவுக்கு ரூ.40 ரூபாய் விலை அதிகரித்து 100 க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று 40 டன் வரத்து வந்ததால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது.

முருங்கை விலை (Drumstick Price)

திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளக்கோயில், மூலனூர், தாராபுரம், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் வரத்து குறைவு காரணமாக வெள்ளக்கோயில் முருங்கை கொள்முதல் நிலையத்தில் முருங்கைக்காய் கிலோ ஒன்றுக்கு 45 ரூபாய் விலை அதிகரித்து விற்பனையானது. வெள்ளக்கோயிலில் இயங்கும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு, சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த முருங்கைக் காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

இதனை வியாபாரிகள் வாங்கி கோவை, சென்னை மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைப்பார்கள். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 15 டன் முருங்கைக் காய்கள் விற்பனைக்கு வந்தன. ஒரு கிலோ ரூ.14க்கு விற்பனையானது. கடந்த வாரத்தில் 10 டன் அளவுக்கு மட்டும் விற்பனைக்கு வந்தது. இதில் மர முருங்கை கிலோ ரூ.45க்கும், செடி முருங்கை கிலோ ரூ.50க்கும், கரும்பு முருங்கை கிலோ ரூ.60க்கும் விலைபோனது. கடந்த வாரத்தில் ஒரு கிலோவுக்கு ரூ.45 விலை அதிகரித்து விற்பனையானது.

இந்நிலையில் இந்த வாரம் வெள்ளக்கோயில் மார்கெட்டுக்கு 40 டன் அளவுக்கு முருங்கை வரத்து அதிகரித்து வந்ததன் காரணமாக ஒரு கிலோ மர முருங்கை ரூ.15 வரையும், செடி முருங்கை ரூ.20 வரையும், கரும்பு முருங்கை ரூ.30 வரையும் விலை குறைந்துள்ளது. வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த வாரத்தை விட ரூ.60 முதல் ரூ.70 வரை விலை சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க

தென்னங்ன்று விற்பனையில் விவசாயிகள்: வருமானத்திற்கு மாற்று வழி!

இந்த 4 இலைகள் போதும்: இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த!

English Summary: Moringa prices in reduced due to increase in supply! Published on: 20 September 2022, 07:59 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.