ஈரோட்டில் உள்ள கொடுமுடி விற்பனைக் கூடத்தில் 15 லட்சத்து 79 ஆயிரத்துக்கு தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 10,169 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்த நிலையில் இவை சுமார் 15 லட்சத்துக்குமேல் ஏலம் போயுள்ளது.
இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 20 ரூபாய் 16 காசு எனும் விலைக்கும், அதிகபட்ச விலையாக 25 ரூபாய் 10 காசு எனும் விலைக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 55 காசு எனும் விலைக்கும் ஏலம் போனது. மொத்தம் 3,889 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 88 ஆயிரத்து 885 ரூபாய்க்கு விற்பனையாகியது.
இதேபோன்று, தேங்காய்பருப்பு 409 மூட்டைகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 75 ரூபாய் 46 காசுக்கும், அதிகபட்ச விலையாக 82 ரூபாய் 19 காசுக்கும், சராசரி விலையாக 81 ரூபாய் 60 காசுக்கும் விற்பனையாகின.
அதோடு, இரண்டாம் தரத்தில் உள்ள தேங்காய்கள் குறைந்தபட்ச விலையாக 60 ரூபாய் 29 காசு எனும் விலையிலும், அதிகபட்ச விலையாக 80 ரூபாய் 99 காசு எனும் விலையிலும், சராசரி விலையாக 77 ரூபாய் 49 காசு எனும் விலையிலும் ஏலம் போனது. மொத்தமாக 19,404 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு 14 லட்சத்து 90 ஆயிரத்து 296 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Share your comments