மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் நடவடிக்கையால் பதநீரை வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்யும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் பனை தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூரிய உதயத்திற்கு முன் பனை மரங்களிலிருந்து எடுக்கப்படும் பதநீர் (Pathaneer) பல இந்திய மாநிலங்களில் உட்கொள்ளும் ஊட்டச்சத்து நிறைந்த சுகாதார பானமாக இருந்து வருகிறது. இதை முறையாக சந்தைப்படுத்தாததால் வர்த்தக ரீதியாகப் பதநீரை அதிகளவில் உற்பத்தி செய்ய இயலாமல் போய்விட்டது
பனை மதிப்புக் கூட்டு பொருட்கள்
இந்தியாவில், 10 கோடிக்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. பதநீரை முறையாக சந்தைப்படுத்தினால் இவற்றிலிருந்து மிட்டாய்கள் (Chocolates) மில்க் சாக்லேட்டுகள் (Milk chocolates) ஐஸ்கிரீம் (Ice Creams), பனை வெல்லம் (Jaggery), மற்றும் பாரம்பரிய இனிப்பு வகைகள் (Sweets) தயாரிக்க முடியும். தற்போது இந்தியாவில் 500 கோடி ரூபாய் அளவுக்கு பதநீர் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை வர்த்தக ரீதியாகத் தயாரிக்கும் போது இந்த தொகையை பல மடங்கு அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
தற்போது, மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் நடவடிக்கையால் பதநீரை வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், பெரிய நிறுவனங்களை ஈடுபடுத்தும் சாத்தியக் கூறுகளையும் மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
பதநீர் பானம் தயாரிப்பு
இதன் ஒரு பகுதியாக காதி மற்றும் கிராம தொழில்துறை ஆணையம் (Khadi and Village Industries Commission) சார்பில் மகாராஷ்டிராவில் பதநீரைக் குளிர்பானங்களுக்கு மாற்றாக கொண்டுவரும் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதனால் பனை தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், 50 லட்சத்துக்கும் அதிகமாகப் பனை மரங்கள் உள்ளன. இத்தொழிலில் ஈட்டுப்பட்டுள்ளவர்களை ஊக்குவிக்கும் வகையில் காதி மற்றும் கிராம தொழில்துறை ஆணையம் சார்பில் ரூ .15,000 மதிப்புள்ள உதவி உபகரணங்களை வழங்கியுள்ளது. இந்த முயற்சி 400 உள்ளூர் பாரம்பரிய பொறியாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பனை ஏற்றுமதி
இது குறித்து, காதி மற்றும் கிராம தொழில்துறை ஆணையத் தலைவர் வினாய் குமார் சக்சேனா கூறுகையில், பனைத் தொழில் இந்தியாவில் ஒரு பெரிய வேலைவாய்ப்பை உருவாக்கும். இலங்கை, ஆப்பிரிக்கா, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளிலும் பதநீர் ஒரு பொதுவான பானமாக இருப்பதால் அதிக ஏற்றுமதி வாய்ப்பு கிடைக்கும் என்றார். மகாராஷ்டிரா, குஜராத், கோவா, டையு மற்றும் டாமன், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் ஏராளமான பனை வயல்கள் உள்ளன, எனவே நாம் பதநீரை முறையாக சந்தைப்படுத்தினால் பதநீர் மற்றும் பனை வெல்லம் உற்பத்தியில் உலக அவளில் முன்னணி உற்பத்தியாளராக இந்தியா உயரும் வினய் சக்சேனா கூறினார்.
மேலும் படிக்க...
மானிய விலையில் காய்கறி விதைகள் - தோட்டக்கலை துறை!
PM-Kisan; திட்டத்தில் நீங்கள் இணைந்துவிட்டீர்களா? இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்!!
PAN card வைத்திருப்பவர்கள் இதனை உடனே செய்யுங்கள்
Share your comments