ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானி கடந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து சம்பளமே பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
முகேஷ் அம்பானி (Mukesh Ambani)
2020 ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பு தொடங்கியபோது ரிலையன்ஸ் நிறுவனத்தில் உயர்நிலையில் உள்ள அதிகாரிகள் சம்பளத்தை குறைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. கீழ்நிலை ஊழியர்களுக்கான சம்பளம் குறைக்கப்படவில்லை. அப்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கொரோனா பாதிப்பின்போது சம்பளம் பெற வேண்டாம் என முடிவு செய்தார். இதன்படி 2020-21ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் இருந்து முகேஷ் அம்பானி சம்பளம் பெறவில்லை.
இந்நிலையில், கடந்த 2021-22ஆம் நிதியாண்டிலும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இருந்து முகேஷ் அம்பானி சம்பளம் பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் முகேஷ் அம்பானி தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் பதவி வகித்து வருகிறார்.
கடந்த இரண்டு நிதியாண்டுகளாக முகேஷ் அம்பானி சம்பளம், படி உள்ளிட்ட சலுகைகள், பணி ஓய்வு பலன்கள், கமிஷன், பங்குகள் உள்ளிட்ட எந்தவொரு சலுகையையும் பெற்றுக்கொள்ளவில்லை என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு முன் முகேஷ் அம்பானி ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச டியூஷன்: ஆகஸ்ட் 15 முதல் தொடக்கம்!
200 ரூபாய் முதலீட்டில் கணவன் மனைவி இருவருக்கும் பென்சன் திட்டம்!
Share your comments