இந்தியா முழுவதும் கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறும் இது தொடர்பாக ஏப்ரல் 10 மற்றும் 11 ஆம் தேதி நாடு தழுவிய போலி பாதுகாப்பு சுகாதார ஒத்திகை நடைப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறும் இது தொடர்பாக ஏப்ரல் 10 மற்றும் 11 ஆம் தேதி நாடு தழுவிய போலி பாதுகாப்பு சுகாதார ஒத்திகை நடைப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறையின் முதன்மைச் செயலாளருமான டாக்டர் ராஜீவ்பால் மற்றும் ராஜேஷ் பூஷன் சார்பில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து மாநில சுகாதாரத்துறைக்கும் அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-
இந்த ஆண்டின் பிப்ரவரி மாத நடுப்பகுதியில் இருந்து நாட்டில் கோவிட்-19 தொற்று பரவல் எண்ணிக்கை படிப்படியாக அதே நேரத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றுவரை, இந்தியாவில் பின்வரும் மாநிலங்களில் கோவிட்-19 தொற்று பரவல் காணப்படுகிறது. கேரளா (26.4%), மகாராஷ்டிரா (21.7%), குஜராத் (13.9%), கர்நாடகா (8.6%) மற்றும் தமிழ்நாடு (6.3%). அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மூலம் குறிப்பிடத்தக்க அளவு COVID-19 தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதன் விளைவாக இந்த நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. தற்போது மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ள கொரோனா தொற்றின் எழுச்சியைக் கட்டுப்படுத்த பொது சுகாதார நடவடிக்கைகள் மீண்டும் தேவைப்படுகின்றன.
இன்ஃப்ளூயன்ஸா (ஐஎல்ஐ) மற்றும் கடுமையான சுவாச நோய் (SARI) ஆகியனவும் கொரோனா தொற்று பரவலுடன் தற்போது அதிகரித்து வருவதை அனைத்து மாநிலங்களும் உன்னிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் பொதுவாக ஜனவரி முதல் மார்ச் வரையிலும், ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலும் இன்ஃப்ளூயன்ஸா தொற்றின் அதிகரிப்பு காணப்படுவது வழக்கம். தற்போது, நாட்டில் புழக்கத்தில் உள்ள இன்ஃப்ளூயன்ஸாவின் மிக முக்கியமான துணை வகைகள் இன்ஃப்ளூயன்ஸா A (H1N1) மற்றும் இன்ஃப்ளூயன்ஸா A (H3N2) ஆகும்.
நெரிசலான மற்றும் மோசமான காற்றோட்ட அமைப்புகளைத் தவிர்ப்பது, தும்மும்போது அல்லது இருமும்போது கைக்குட்டை போன்றவற்றை பயன்படுத்துதல், முககவசம் அணிதல் போன்ற எளிய பொது சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த இரண்டு நோய்களையும் எளிதில் தடுக்க முடியும். நெரிசலான மற்றும் மூடிய அமைப்புகளில், கை சுகாதாரத்தை பராமரித்தல், பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிர்த்தல் போன்றவை.
ஒன்றிய சுகாதார அமைச்சகம் ஏற்கனவே விரிவான COVID-19, மற்றும் பருவகால தொற்றுகளை கண்டறியும் முறை, அவற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதனை பின்பற்றி உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாநில/யூனியன் பிரதேசங்களுக்களின் சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அனைத்து மாநில/யூனியன் பிரதேச அரசுகளும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனைகளில் போதுமானளவு தடுப்பு மருந்துகள், ICU மற்றும் காலி படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ ஆக்சிஜன், தடுப்பூசிகள் போன்றவற்றை தயார்நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதன் விளைவாக, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நாடு தழுவிய சோதனை ஒத்திகை (nation- wide mock drill) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுகாதார வசதிகள் (பொது மற்றும் தனியார்) பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநில அரசுகள் தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை சார்பில் போதுமான உதவிகள் வழங்கப்படும் என அனைத்து மாநிலங்களின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறையின் முதன்மைச் செயலாளருமான டாக்டர் ராஜீவ்பால் மற்றும் ராஜேஷ் பூஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
பிண்றீங்களே..நீங்க வேற லெவல்- நிலக்கடலை விவசாயியை பாராட்டிய இறையன்பு ஐஏஎஸ்
Share your comments