நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டை முன்னிட்டு, தேசியக் கொடியை இரவிலும் பறக்க விடலாம்' என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை ஊக்குவிக்கும் வகையில் விதிகளில் மாற்றம் செய்துள்ளது மோடி தலைமையிலான மத்திய அரசு.
அமிருத பெருவிழா
தேசத்தின் 75வது சுதந்திர தினம், இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதனை, 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்ற பெயரில் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
வீடுகளில் கொடி
இதன் ஒருபகுதியாக, இதற்கிடையே ஆகஸ்ட் 13 முதல் 15 வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் 'வீடு தோறும் மூவர்ணக்கொடி' என்ற பிரசாரம் துவக்கப்பட்டுள்ளது.
மாலை 6 மணிக்கு மேல்
ஆனால் தேசியக் கொடி மாலை 6மணிக்கு மேல் கம்பத்தில் பறக்கக்கூடாது என்ற விதி உள்ளது. எனவே மத்திய அரசின் இந்த வீடு தோறும் மூவர்ணக்கொடி' என்ற பிரசாரம், விதிகளுக்கு புறம்பானதாக இருப்பதாக புகார்கள் எழுந்தன.
விதிகளில் மாற்றம்
இதையடுத்து, 'தேசியக்கொடியை காலை 7:30 மணி முதல் ஏற்றலாம்; மாலை 6:00 மணிக்குள் இறக்கி விட வேண்டும். தேசியக் கொடியை கைகளால், காதி துணியில்தான் தயாரிக்க வேண்டும்' என்ற விதிமுறைகளில் அரசு மாற்றம் செய்துள்ளது.
உள்துறை செயலர்
இது தொடர்பாக,மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடும் வகையில், தேசியக் கொடியை இரவிலும் பறக்க விடலாம்.
தேசியக் கொடி
அதேநேரத்தில், இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பருத்தி, பாலியஸ்டர், பட்டு, காதி துணிகளால் ஆன தேசியக்கொடிகளையும் பயன்படுத்தலாம். வரும் ஆகஸ்ட் 15ல் அனைத்து பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் கண்டிப்பாக தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments