திருப்பூர் மாவட்டம் பல்லடத்தினைத் தலைமையிடமாக கொண்டு உலகத் தென்னை உழவர் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் 1200க்கும் மேற்பட்ட விவசாயிகளைப் பங்குதாரராகக் வைத்துத் தென்னை மரங்களில் இருந்து நீரா பானத்தினை உற்பத்தி செய்து அதனை அனைவரிடமும் கொண்டு சேர்த்து வருகிறது. இந்த நீரா பானம் பல நன்மைதரக்கூடிய வைட்டமின்கள், இரும்பு மற்றும் தாதுக்கள் நிறைந்ததாக இருக்கிறது. இது இ-காமர்ஸ் முறையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்பொழுது, நீரா பானத்தினை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதனால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேலோங்க வாய்ப்புள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியம் குறிப்பிடுகையில், அமெரிக்காவில் இருக்கின்ற தமிழகத்தினைச் சேர்ந்த கதிர்குருசாமி என்பவர் மூலம் ரீஜெண்ட் நார்த் அமெரிக்க நிறுவனம் நீரா பானத்திற்கான ஆர்டரை வழங்கியுள்ளது எனக் கூறியுள்ளார்.
இதனால் தற்பொழுது தினசரி 5000 பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யும் நிலையில், அதனை உயர்த்தி இனி 20,000 ஆயிரம் பாக்கெட்டுகளாகத் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ரூ.30 லட்சம் மதிப்புள்ள நீராபானம் அமெரிக்காவிற்கு கண்டெய்னர் மூலம் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. இந்த ஆண்டு நீரா பானத்தின் விற்பனை ரூ.25 கோடி ரூபாயை எட்டுவதற்கான இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் நீரா பானத்தினை 5 கண்டெய்னர்களில் அனுப்ப திட்டமிடப்பட்டு இருக்கிறது.இதன் விற்பனை அதிகரித்தால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேலோங்க வாய்ப்பு இருக்கிறது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் எம்.அங்கமுத்து தகவல் கூறுகையில், இந்தியப் பாரம்பரியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை மேம்படுத்திக் கிராமப்புறங்களில் தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்கிற பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கான முயற்சியாக இந்த முயற்சி அமைந்து இருப்பதாகப் புகழாரம் சூட்டி இருக்கிறார்.
தென்னீரா பானம் தமிழகத்தின் தனித்துவமான நல்ல தயாரிப்பு ஆகும். இதுபோன்ற முயற்சி அனைத்து மாநிலங்களிலும், எல்லா பொருள்களுக்கும் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தியப் பாரம்பரியத்தின் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை மேம்படுத்திக் கிராமங்களில் தற்சார்பு பொருளாதாரத்தினை உருவாக்க வேண்டும்.
தென்னீராவை 50 நாடுகளில் விற்க வேண்டும் என எண்ணுவதாகக் கூறப்படுகிறது. லூலூ, வால்மார்ட் போன்ற மிகப்பெரிய பேரங்காடிகளில் பிரதான பானமாக விற்கப்பட வேண்டும் என எண்ணப்படுகிறாது. தற்போது இந்தத் தென்னீரா பானம் அபேடா மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனை அதிக அளவில் ஏற்றுமதி செய்வதன் மூலம் அபேடா குழு மற்றும் விவசாயிகள் அதிக பயன் அடைவர் எனக் கூறப்படுகிறது. அதோடு, தமிழக அரசுடன் இணைந்து இந்த ஏற்றுமதியினை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நீராபானம் தயாரிப்பானது தென்னை மரத்தில் இருக்கும் பாளையில் அதற்கென்று தனியாக வடிவமைக்கப்பட்ட ஐஸ் பெட்டியை வைத்து நீராவை சேர்த்துத் தயாரிப்பதாக எடுக்கப்படுகிறது. அதனைக் குளிர்பதனக் கிடங்கில் ஒரு குறிப்பிட்ட குளிர் நிலையில் பத்திரப்படுத்தி, கை படாமல் சுத்தமான முறையில் டெட்ரா பேக்கில் அடைக்கப்படுகிறது. இதற்காக 2 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து இறுதியாக சிபிசிஆர்ஸ் காசர்கோடு ஆராய்ச்சி நிறுவனம் மூலம் தரம் உறுதி செய்யப்பட்டு 6 மாதங்கள் வரை இந்த தென்னீராவை கெடாமல் வைத்திருக்க முடியும் எனக் கூறும்கின்றனர்.
மேலும் படிக்க
தென்னந் தோப்பில் ஊடுபயிர் செய்ய சிறந்த பயிர்கள் என்னென்ன?
தமிழ்நாட்டில் மே-ஜூன் பயிர்கள்: உங்கள் அறுவடையை அதிகரிக்க வழிகாட்டி
Share your comments