1. செய்திகள்

ஏப்ரல் 15 நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு

KJ Staff
KJ Staff

மருத்துவ துறை படிப்பிற்கான நுழைவு தேர்வு வரும் மே 5 ம் தேதி நாடு முழுவதும்  நடக்கிறது. இதற்கான நுழைவுச் சீட்டு ஏப்ரல் 15 அன்று வெளியிடப்படுகிறது என தகவல் கிடைத்துள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவ துறையில் சேர நீட் என்னும் நுழைவு தேர்வினை இந்தியா முழுவதும் நடத்த படுகிறது. கடந்த ஆண்டு வரை இத்தேர்வினை  சிபிஎஸ்இ கல்வி ஆணையம் நடத்தி வந்தது. இந்த ஆண்டு முதல் இந்த நுழைவு தேர்வினை தேசிய தேர்வு ஆணையம் நடத்த உள்ளது.இந்த ஆணையம் ஏற்கனவே  பொறியியல் தேர்வு, ஜேஎன்யூ மற்றும் ஐசிஏஆ போன்ற தேர்வினை நடத்தி வருகிறது. மாணவர்களின் வசதிக்காக கேள்வித்தாள்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட மொத்தம் 11 இந்திய மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த  நுழைவு தேர்வானது பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ துறைக்கும் பொதுவானதாகும்.  

English Summary: NEET exams hall ticket issue on Apr 5

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.