விவசாயிகளுக்குப் பண்ணை அமைக்க ரூ. 50, 000 மானியம் அறிவிப்பு!
தஞ்சை மாவட்டம் பேராவூரணி விவசாயிகளுக்கு பண்ணை அமைக்க ரூ. 50 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. தமிழக அரசின் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பண்ணையம் அமைக்க ரூ. 50 ஆயிரம் மானியம் வழங்கப்பட இருக்கிறது. இதில் ஆடு, கோழி, மாடு, தேனி வளர்ப்பு என இவை போன்ற வேளாண் சார்ந்த செயல்பாடுகளுக்கு இம்மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் 2022-23 ஆம் ஆண்டில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சியைத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட திருச்சிற்றம்பலம், வளப்பிரமன்காடு, பின்னவாசல், கல்லூரணிகாடு, தென்னங்குடி, அலிவலம் மற்றும் புனல் வாசல் பஞ்சாயத்துகளைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
இனி கிசான் கிரெடிட் கார்டு ஈசியாக வாங்கலாம்: அமல்படுத்தப்பட்டது புதிய நடைமுறை
கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகள் பெறும் கடன் தொகைக்கு மிக குறைவான வட்டி விகிதம் விதிக்கப்படுகிறது. இத்துடன் வட்டி மானியமும் அரசால் வழங்கப்படுகிறது. பொதுவாக கிசான் கிரெடிட் கார்டு பெற விரும்பும் விவசாயிகள் நேரடியாக வங்கிக் கிளைக்குச் சென்று உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். எனினும், இனி வங்கிக் கிளைக்கே செல்லாமல் கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என இரண்டு வங்கிகள் அறிவித்துள்ளன. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பெடரல் வங்கி ஆகிய இரு வங்கிகளில் இனி விவசாயிகள் ஆன்லைனிலேயே கிசான் கிரெடிட் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். ஆவணங்களும் ஆன்லைனிலேயே சரிபார்க்கப்படும் எனக் கூறப்படுகிறது.
பள்ளி மாணவிகளுடன் சரிசமமாக அமர்ந்து உரையாடிய ராகுல் காந்தி! அதிகம் பேசப்படும் சுவாரஸ்யமான தகவல்!!
பாரத் ஜோடோ யாத்ரா என்றழைக்கப்படும் இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பிரச்சாரப் பயணம் நடத்தி வரும் ராகுல் காந்தி தற்பொழுது கேரள மாநிலத்தில் இருக்கிறார். அங்கு பள்ளி மாணவிகளைச் சந்தித்து உரையாடினார். அவர்களின் வருங்கால கனவு என்ன எனக் கேட்டறிந்தபோது அவர்கள் தாங்கள் செவிலியராக விரும்புவதாகவும், அதிலும் நாங்கள் பி.டி.எஸ் ஆர்மி என்பதால் தென்கொரியாவில் குடியேற விரும்புவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். சந்திப்பின் நிறைவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மாணவிகள் தாங்கள் ராகுல் காந்தியைச் சந்திப்போம் என நினைக்கவில்லை, அதிலும் இவர் இவ்வளவு சாதாரணமாகப் பழகுவார் என எண்ணவில்லை எனத் தங்கள் எண்ணத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.
சித்தா ஆயுர்வேதா படிப்பு: இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பம் விநியோகம்
சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி, படிப்பில் சேர இன்று முதல் விண்னப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேர விரும்பும் மாணவர்கள் www.tnhealth.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அக்டோபர் 12 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி படிப்புக்கு 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. எனவே, தகுதியுள்ள மதிப்பெண் கொண்ட மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கிராமங்கள் தோறும் விரையில் ஃபைபர் நெட் சேவை: அமைச்சர் தகவல்
தமிழகக் கிராமங்களில் விரைவில் ஃபைபர் நெட் சேவை வழங்கப்பட உள்ளது என தமிழகத் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கூறியுள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மின் அலுவலகம் நடைமுறைப்படுத்தும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆன்லைன் சேவைகள் மூலமாகத் தமிழக மாவட்டங்களில் சுமார் 38 டன் அளவிற்கு காகிதப் பயன்பாடு குறைந்துள்ளது எனவும், இதன் மூலமாகச் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க
PM Kisan: ரூ. 2000 பற்றித் தெரிந்துகொள்ள இந்த நம்பரை அழையுங்க!
Share your comments