தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு தகவல் தொடர்பு அமைச்சகத்துடன் இணைந்து திருடப்பட்ட மொபைல் போன்களைக் கண்டறிய உதவும் புதிய செயலியை தொடங்கியுள்ளது.
துளைத்த மொபைல் போன்களை கண்டுபிடிக்க புதுமுயற்சியாக தொலைத்தொடர்புத் துறையால் உருவாக்கப்பட்ட KYM (know your mobile) - மொபைல் செயலியை (ஆப்) பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
KYM என்று டைப் செய்து பின் IMEI எண்ணை டைப் செய்து “14422” க்கு SMS அனுப்புவதன் மூலம் அல்லது Google Play store இல் கிடைக்கும் KYM ஆப் மூலம் இதைச் சரிபார்த்து உங்கள் மொபைல் போனை கண்டறியலாம்.
தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல்களைக் கண்டறிய, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் CEIR [Central Equipment Identity Register]உள்நுழைவு ஐடியை உருவாக்கும் பணியை DoT உடன் இணைந்து TN சைபர் கிரைம் பிரிவு மேற்கொண்டுள்ளது.
இந்தப் பயன்பாடு எந்த மொபைலையும் அதன் IMEI எண் மூலம் சரிபார்க்கும். மொபைல் சாதனத்தை வாங்கும் போது, KYM ஆப் மூலம் மொபைல் சாதனங்களின் உண்மையான தன்மையை சரிபார்க்க முடியும்.
செய்தி சுருக்கம்
தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு தகவல் தொடர்பு அமைச்சகத்துடன் இணைந்து திருடப்பட்ட மொபைல் போன்களைக் கண்டறிய உதவும் புதிய செயலியை தொடங்கியுள்ளது. Google Play store இல் கிடைக்கும் KYM ஆப் மூலம் இதைச் சரிபார்த்து உங்கள் மொபைல் போனை கண்டறியலாம். இதனால் வாங்கிய புதிய மொபைல் போன் உண்மையானதா இல்லை நகலா என்பதையும் கண்டறியலாம்.
மேலும் படிக்க
"பிங்க் வாட்ஸ்அப்" மோசடி லிங்கை தொட்டா மொத்த பணமும் காலி! உஷார்!
யப்பாடா.. 3 ரக தக்காளியும் கிலோவுக்கு ரூ.80 வரை அதிரடி குறைவு
Share your comments