சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் சுமார் ரூ. 17.63 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.
அரசின் பயனானது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும், அதிலும் குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு உறுதியாக கிடைக்க வேண்டும் என்றும் முதல்வர் பேசியுள்ளார். அரசின் கவனம் மிகுதியாக தேவைப்படுவோரில் குறிப்பிடத்தக்க பிரிவினர் மாற்றுத் திறனாளிகள் என்று அவர் கூறியிருக்கிறார்.
மேலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை காக்கவும் அவர்கள் சமுதாயத்தில் சமநிலையில், சுயமரியாதையுடன் வாழும் நிலையினை உறுதி செய்யவும் 2011-ம் ஆண்டில் தலைவர் கலைஞரால் இது தனித்துறையாக உருவாக்கப்பட்டது என்பதை நினைவு கூறிய அவர்,
மாவட்ட அளவில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும், மாற்றுத் திறனாளிகளுக்கு சரியான முறையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய, உயர்மட்டக் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார்.
அதோடு, 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடைய அரசாணை வெளியிடப்பட்டுள்ளதையும் எடுத்து விளக்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் வழங்கும் திட்டம் உலக வங்கி நிதியுடன் ஆயிரத்து 763 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்பட உள்ளன. அடுத்த 6 ஆண்டுகளில், அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சி ஆகியன அரசின் தற்போதுள்ள திட்டங்களுடன் ஒருங்கிணைத்து இதர அரசுத்துறைகளின் மூலம் தொழில்திறன் பயிற்சியும் அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Share your comments