தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மாவட்ட தலை நகரிலேயே புதிய ரேஷன் கார்டு அச்சிடும் வசதி செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
புதிய ரேஷன் கார்டு (New Ration Card)
தமிழகத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் அரிசி மற்றும் மளிகை பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் கார்டு இல்லாதோர்கள் புதிய ரேஷன் கார்டை பெற முயற்சித்து வருகின்றனர். கடந்த 2021ம் ஆண்டு தேர்தலின் போது குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு புதிய ரேஷன் கார்டுக்கு பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் அந்தந்த மாவட்ட தலைநகரிலேயே புதிய ரேஷன் கார்டை அச்சிடும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு மாதமும் 15 நாட்கள் இடைவெளியில் மாவட்ட நிர்வாக ஒப்புதலுடன் புதிய கார்டுகளை அச்சிட்டு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டா மாப்பிள்ளையா இருக்கலாம்- பட்ஜெட் உரையில் சிரிப்பை ஏற்படுத்திய வேளாண் அமைச்சர்
உழவர்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா? தொடங்கியது வேளாண் பட்ஜெட் தாக்கல்
இது குறித்து பேசிய குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலர்கள் 4 மாதம் நிலுவையில் உள்ள ரேஷன் கார்டு விண்ணப்பங்களை பரிசீலித்து புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
மேலும் படிக்க
நீதி கேட்டு தஞ்சாவூர் விவசாயிகள் நெடும் பயணம்: டெல்லியில் போராட்டம்!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை மையம் தகவல்!
Share your comments