தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுபுரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் அக்டொபேர் 6 மற்றும் 9னாகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இதயடுத்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை இன்று அறிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறவும், தேர்தல் நடத்தை பொதுமனக்களுக்கு இடையூறு இல்லாமல் பயன்படுத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
- தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நாள் வரை, தேர்தல் பிரச்சாரங்களுக்காக வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலி பெருக்கிகளை காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- பொதுக்கூட்ட பிரச்சாரங்களுக்காக ஒலி பெருக்கிகளை பயன்படுத்த விரியம்பினால் காவல்துறையிடம் எழுத்துபூர்வமாக அனுமதி பெற வேண்டும்.
- ஒளி பெருக்கிகளை பொது அனுமதிக்கு இடையூறு ஏற்படாதவாறு அனுமதிக்கப்பட்ட காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படுத்த வேண்டும்.
- விதிகளை மீறினால் அணைத்து கருவிகளும் பறிமுதல் செய்யப்படும் மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் சுவர்களில் எழுதவோ அல்லது சுவரொட்டி ஒட்டவோ தடை விதிக்க பட்டுள்ளது.
இடத்தின் உரிமையாளரின் சம்மதம் பெறப்பட்டுள்ளது என்ற காரணத்தின் அடிப்படையில் எந்த சூழ்நிலைகளிலும் சுவரில் சுவரில் எழுதவோ அல்லது சுவரொட்டி ஓட்டுவதோ கூடாது.
மேலும் படிக்க:
நாடு முழுவதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தை துவக்கினார் பிரதமர்!
கூட்டுறவு நகைக் கடன்களை ஆய்வு செய்ய குழு: தமிழக அரசு அதிரடி!
Share your comments