அதிக வீரியமுள்ள பல வகையில் உருமாறியுள்ளதாக கூறப்படும் புதிய வகை கொரோனா வைரசான 'ஒமிக்ரான்' (Omicron) காரணமாக அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்,'' என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
ஒமிக்ரான்(Omicron)
தற்போது, புதிதாக அதிக வீரியமுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் தென்பட்டுள்ளது. இதற்கு, 'ஒமிக்ரான்' என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது. தென் ஆப்ரிக்கா, மொசம்பிக் போன்ற நாடுகளிலும், ஹாங்காங்கிலும் இந்த புதிய வகை வைரஸ் பரவியுள்ளது.
இந்த வைரஸ் பல வகைகளில் உருமாறியுள்ளதாகவும், முந்தைய வைரஸ்களை விட மிக வேகமாக பரவக்கூடியதாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளன. இந்நிலையில், இந்த வைரசை இந்தியாவில் கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
விழிப்புணர்வு (Awareness)
இதன் ஒரு பகுதியாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 'ஒமிக்ரான்' வைரஸ் தென்பட்டுள்ள நிலையில், தீவிர கண்காணிப்பு மற்றும் விழிப்புடன் (Awareness) இருக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். அனைவரும் உஷாராக இருக்க வேண்டும். ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனைகளை குறைத்துள்ள மாநிலங்கள் அதிகப்படுத்த வேண்டும்.
மேலும் படிக்க
இந்தியாவில் புதுவகை கொரோனா பாதிப்பு இல்லை: மத்திய அரசு தகவல்!
தடுப்பூசிக்கு கட்டுபடாத புதிய வகை வைரஸ் ''ஒமிக்ரான்'': உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
Share your comments