இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் கீழ் செயல் பட்டு வரும் ஆராய்ச்சி நிறுவனம் புதிதாக இரண்டு வேர்க்கடலை வகைகளை அறிமுக படுத்த உள்ளது. இதில் நன்மை பயக்கும் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் வெகு விரைவில் Girnar 4 (ICGV 15083) and Girnar 5 (ICGV 15090) விளைச்சலுக்கு வர உள்ளது.
இந்த வகை எண்ணெய் வித்துக்களில் கொழுப்பு சத்துக்கள் குறைவாக இருப்பதால் இது உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். மேலும் நுகர்வோருக்கும் மற்றும் உணவு சார்த்த தொழில் ஈடுபட்டுள்ளோருக்கும் இது ஒரு மகிழ்ச்சியான செய்தி எனலாம்.
சிறப்புகள்
பொதுவாக வேர்க்கடலையின், எண்ணெய் வித்துக்களில் நன்மை பயக்கும் கொழுப்பு சத்து என்பது 40 % முதல் 50 % வரை இருக்கும். ஆனால் இந்த வகை வேர்க்கடலையில் நன்மை பயக்கும் கொழுப்பு சத்து என்பது 80 % வரை இருக்கும்.
இதனை உட்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்பு சத்துக்களை தரும் என கண்டுபிடிக்க பட்டுள்ளதாக இந்தியா வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் உறுதி செய்துள்ளது.
புதிய வகை வேர்கடலைகள் மற்ற பயன்பாட்டிற்கும் உகந்ததாக கூறுகிறார்கள். வேர்க்கடலை சார்ந்த உணவு பொருட்கள், தின்பண்டங்கள், மாவு பொருட்கள் தயாரிப்பதற்கும் ஏற்றது என அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர்.
பல்வேறு இடங்களில் இவ்வகை வேர்கடலைகளின் தன்மைகள் பரிசோதனை செய்யப்பட்டு இதன் தரம் உறுதி படுத்த பட்டுள்ளது. 8 ஆண்டுகள் பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் முயற்சிக்கு பின் இதனை கண்டு பிடித்து உள்ளார். வெகு விரைவில் விளைச்சலுக்கு வர உள்ளது.
இந்தியா வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், கீழ் செயல் பட்டு வரும் வேர்க்கடலை ஆராய்ச்சி மையம், குஜராத் மற்றும் தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழகம், மற்றும் தெலுங்கானா வேளாண் பல்கலைக்கழகம் இணைத்து இதனை கண்டு பிடித்து உள்ளார்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments