1. செய்திகள்

New Wage Code: இனி வாரத்திற்கு நான்கு வேலை நாட்கள் மட்டுமே!!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Only four working days a week

மத்திய அரசு புதிய ஊதியக் குறியீட்டை விரைவில் அமல்படுத்தவுள்ளது. அதில், சம்பளம், வேலை நாட்கள் உள்ளிட்ட பல விதிகள் மாற்றப்படலாம்

புதிய ஊதியக் குறியீடு வேலை நாட்கள் தொடர்பாக  புதிய நெறிமுறைகள் விரைவில் அமல்படுத்தவுள்ளது. இது அமல்படுத்தப்பட்டால்,  நீங்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்வீர்கள். ஊழியர்களின் வேலை நேரம் தொடர்பாக சில மாற்றங்களை செய்ய மத்திய தொழிலாளர் அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. இது குறித்த இறுதி விதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஊதியக் குறியீடு வேலை நேரம் 9 முதல் 12 வரை அதிகரிக்கும். இதில் ஊழியர்கள் வாரத்தில் 48 மணி நேரம் பணியாற்ற வேண்டியிருக்கும். சில தொழிற்சங்கங்கள் 12 மணிநேர வேலை மற்றும் 3 நாட்கள் விடுப்பு விதி குறித்து கேள்விகளை  எழுப்பியிருந்தன. ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்யும் நபர், வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது. அவருக்கு ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால், ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை செய்தால், வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்வது போதுமானது. அவ்வாறு பணியாற்றும் நபருக்கு வாரத்தில்  3 நாட்கள் ஓய்வு விடுப்பு வழங்கப்பட வேண்டும்.

ஊழியர்களின் (Earned Leave) விடுப்பை 240 முதல் 300 ஆக உயர்த்தப்படலாம். தொழிலாளர் ஊதிய குறியீட்டு விதிகளில் மாற்றங்கள் செய்வது குறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சகம், தொழிலாளர் சங்கம் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் மத்தியில் ஆலோசனை கூட்டம்  நடத்தப்பட்டன. இதில் ஊழியர்களின் எர்ண்ட் லீவ் என்னும் வகை விடுப்பை 240 முதல் 300 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது.

இது தவிர, இது தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள திட்டத்தின் படி, எந்த ஊழியரும் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய கூடாது என்ற விதியும் உருவாக்கப்பட்டது. ஊழியருக்கு ஒரு அரை மணி நேர இடைவெளியும் அவசியம் இருக்க வேண்டும்.

புதிய ஊதியக் குறியீடு இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. சில மாநிலங்கள் இதை செயல்படுத்த இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது அதை அக்டோபரில் மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது.

மேலும் படிக்க:

Tokyo Olympic- 30 வினாடிகள் மட்டும் மாஸ்க்கைக் கழற்றலாம்!

தமிழக கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

SBI வங்கியில் விவசாய கடன் வட்டி விகிதம் எவ்வளவு?

English Summary: New Wage Code: Only four working days a week !! Published on: 26 July 2021, 10:05 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.