1பெரியாறு, வைகை அணை நீர்மட்டம் உயர்வு மற்றும் காவிரி ஆற்றின நிலவரம்
2.மாவட்ட விதை உற்பத்தியாளர்கள் மற்றும் சாகுபடியாளர்களின் கவனத்திற்கு!
3.சமையல் எண்ணெய் விலையைக் குறைக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
4.விவசாயிகள் ஏரி குளங்களில் மண் எடுக்கலாம்! தமிழக அரசு உத்தரவு!
5. 4 நாட்களில் விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்க: அமைச்சர் அறிவிப்பு!
6. நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது! அரசுக்குக் கோரிக்கை!!
7. இன்றைய வானிலை தகவல் மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை
1. பெரியாறு, வைகை அணை நீர்மட்டம் உயர்வு மற்றும் காவிரி ஆற்றின நிலவரம்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முல்லைபெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் மற்றும் மஞ்சளாறு அணையின் நீர்மட்டமும் அதிகரித்திருப்பது குறிப்பிடதக்கது.
மேலும் கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்ததால் கர்நாடகத்தில் உள்ள கபினி அணை மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் நிரம்பு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 24,000 கன அடி தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது. கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்தை நோக்கி வருகிறது.
2. மாவட்ட விதை உற்பத்தியாளர்கள் மற்றும் சாகுபடியாளர்களின் கவனத்திற்கு!
வித்தே விளைச்சலுக்கு முதலாகும் என்பதற்கேற்ப விவசாயத்துக்கு தேவையான மிக முக்கியமான இடுபொருட்கள் நல் விதையாகும். நல்விதை என்பது அதிக முளைப்புத்திறன் அதிகச் சுத்தம் மற்றும் குறைந்த அளவு ஈரத்தன்மை கொண்டதாகும். எனவே, சிறந்த விதை தேர்வுக்காக, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் பணி விதை மாதிரிகளை தங்கள் முழு முகவரியுடன் ரூ.80 கட்டணமாகச் செலுத்து தூத்துக்குடி எட்டாயப்புரம் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை வளாகத்தில் செயல்பட்டு வரும் விதைப்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி விதையின் தரத்தினை தெரிந்துக்கொள்ளலாம் என திருநேல்வேலி விதைப்பரிசோதனை அலுவலர் ஆனந்தி ராதிகா மற்றும் தூத்துக்குடி வேளாண்மை அலுவலர் சேக்நூகு ஆகியோர்கள் கேட்டுக்கொண்டனர்.
NHAI ஆட்சேர்ப்பு 2022: BE படித்திருந்தால் மாதம் 39k சம்பளம்!
3. சமையல் எண்ணெய் விலையைக் குறைக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
உணவு மற்றும் பொது விநியோகத் துறை, கடந்த 6ந் தேதி நடைபெற்ற கூட்டத்தில், சமையல் எண்ணெயின் விலையை அதிகபட்ச சில்லரை விலையில் ரு.15ஐ உடனடியாக அமலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவசை உறுதி செய்யுமாறு முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. விலைகுறைப்பு எந்த வகையிலும் நீர்த்துப் போகாமல் இருக்க உற்பத்தியாளர்ளும் சுத்திகரிப்பாளார்களும், விநியோகஸ்தர்களுக்கு விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
4. விவசாயிகள் ஏரி குளங்களில் மண் எடுக்கலாம்! தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துப் பயன்படுத்தலாம் எனத் தமிழக அரசு அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்களில் படிந்திருக்கும் வண்டல மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துப் பயன்படுத்தலாம் எனத் தமிழக அரசு அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.
5. 4 நாட்களில் விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்க: அமைச்சர் அறிவிப்பு!
நடப்பாண்டு பயிர் காப்பீடு செலுத்த அவகாசம் வரும், ஜூலை மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால், விவசாயிகளுக்கு, அவர்கள் கேட்கும் அடங்கல் உள்ளிட்ட சான்றுகளை, நான்கு தினங்களில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
6. நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது! அரசுக்குக் கோரிக்கை!!
இயற்கை விவசாயி நம்மாழ்வாருக்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறப்பு தீர்மானத்தில், உலகம் பல தொழில்கள் செய்து சுழன்றாலும் ஏர் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புறினும் உழவுத் தொழிலே சிறந்தது என்று கூறியவர் திருவள்ளுவர். அத்தகைய சிறப்பு மிக்க உழவுத்தொழில், அதன் மேன்மைக்கு எனவே எழுந்த புனிதர் நம் மண்ணைக் காத்த ஒருவர்தான் நம்மாழ்வார் ஆவார். அவரது சிறப்பான பணிக்கு விருது வழங்க வேண்டும் என்று தமிழகப் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
7. இன்றைய வானிலை நிலவரம்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான செய்தி
குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
Share your comments