ரேஷன் கடைகளில் விரைவில் இணைய சேவை திட்டம்
தமிழக ரேஷன் கடைகள் வாயிலாக, மக்களுக்கு இணையதள சேவை வழங்கும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது. மத்திய அரசின், 'பி.எம்.வாணி' திட்டத்தின் கீழ், மக்களுக்கு இணையதள சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரேஷன் கடைகளில், 'வைபை' வசதி ஏற்படுத்தி, அந்த கடைக்கு அருகில் இருப்போருக்கு இணையதள சேவை வழங்கப்பட இருக்கிறது. அவ்வாறு சேவை இணைக்கப்பட்டால் மொபைல் போன், 'லேப்டாப்' போன்றவற்றில் இணையதளச் சேவைகளைப் பயன்படுத்தலாம். இணையதளச் சேவை பயன்படுத்துவோர், குறிப்பிட்ட சிறு தொகையை ரேஷன் கடைகளுக்குக் கட்டணமாக செலுத்தினால் ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு வருவாய் கிடைக்கும் என்ற நோக்கில் இந்த இணைய சேவை இணைப்புத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
மேலும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து குவியும் சலுகைகள்!
மீண்டும் தலைதூக்கும் கொரோனா! மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்!
தமிழகம் முழுதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும், கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீதும் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939ன் படி அபராதம் விதிக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு! கட்டுப்பாடுகள் விதிப்பு!
கோவையில் ப்ராஜக்ட் பள்ளிக்கூடத் திட்டம் தொடக்கம்
கோவையில் மாவட்ட காவல் துறை சார்பில் பள்ளிக் குழந்தைகளைப் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் ப்ராஜக்ட் பள்ளிக்கூடத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பாலியல் பிரச்சனைகள் என்ன? பாலியல் தொல்லை நடப்பது தெரிந்தால் எவ்வாறு காவல்துறையிடம் அணுகித் தீர்வு காணவேண்டும் முதலான பல செயல்பாடுகள் குறித்துப் பள்ளிக் குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதே போன்று குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் செயல்படும் 997 பள்ளிகளில் பயிற்சிகள் கொடுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: ப்ராஜக்ட் பள்ளிக்கூடத் திட்டம்: கோவை காவல்துறை அதிரடி!
ஜூலை 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர உள்ளது
சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதை அடுத்து கார் உள்ளிட்ட இலகு ரக வாகனக்களுக்கான கட்டணம் 30 ரூபாயிலிருந்து 33 ரூபாயாகவும், சரக்கு வாகனங்களுக்கு 49 ரூபாயில் இருந்து 54 ரூபாயாகவும், பஸ் மற்றும் கனரக வாகனக்களுக்கு 78 ரூபாயில் இருந்து 86 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வர உள்ளது.
11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மே மாதம் நடைபெற்ற 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 3119 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வினைச் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இதில் 90.07 சதவீத மாணவர்கள் தேர்ச்சியாகியுள்ளனர். மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in அல்லது www.dge1.tn.nic.in அல்லது www.dge2.tn.nic.in அல்லது www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவ மாணவிகள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. டவுன்லோட் லிங்க் இதோ!
தொண்டைமான் மன்னர் ஆட்சியில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்த குறிப்புகளுடன் கல்வெட்டு ஒன்று கண்டெடுப்பு
தொண்டைமான் மன்னர் ஆட்சியில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்ததற்கான சான்றாகக் கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே ஆத்தங்கரை விடுதி ஊராட்சி, கீழவாண்டான் விடுதி வயல்வெளியில், ஓரு ஏர் கலப்பையுடன் நின்ற நிலையில் இருக்கும் விவசாயி ஒருவரின் உருவம் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதோடு, தொண்டைமான் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது மன்னர் விசயரகுநாதராய தொண்டைமான் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதுதான் விசய ரெகுநாதாய சமுத்திரம் எனும் நீர்ப்பாசனம் என்ற தகவல்களும் அக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ரூ. 8 ஆயிரத்தில் 15000mAh பேட்டரி கொண்ட போன்!
வானிலை தகவலகள்
வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்குத் தமிழகத்தில் மழை பெற்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். சென்னையைப் பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். வெப்பநிலை என்று பார்த்தால் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க
மாதம் ரூ. 1000 திட்டம்: ஒரு நாளில் 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வருகை!
ஓய்வூதியம் பெறுவோருக்குச் சூப்பர் நியூஸ்! அடுத்தடுத்த சர்ப்ரைஸ்கள்!!
Share your comments