டீசல் விலை வரலாறு காணாத உச்சமாக ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. எரிபொருட்களின் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.
கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி (புதன் கிழமை) பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 43வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், அண்டைநாடான இலங்கையில், அந்நாட்டு கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெட்ரோலை பெற, அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லை என எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார். இதனால், பெட்ரோல் பங்கில் மக்கள் காத்துக்கிடக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அன்றைய தினம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனால், நவ., 4ல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. அன்று தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்; டீசல், 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகின.
பின், உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலால் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அம்மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால், நாட்டில் 137 நாட்களுக்கு பின், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. தொடர்ந்து அவற்றின் விலை உயர்ந்து வந்தது.
மேலும், தேவையான அளவிற்கு டீசல் இருப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கப்பல் நிறுவனத்திற்கு ஏற்கெனவே 400 கோடி ரூபாய் நிலுவைத் தொகை தர வேண்டும் என்றும் அந்த தொகை அளிக்கப்பட்ட பின்னரே, மேலும் பெட்ரோல் வாங்க முடியும் என்றும் விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
தமிழகத்தில் 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
தமிழகத்தில் நிதி நிலைமை சரியான பிறகு பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும்.
Share your comments