படம் பார்க்க வந்த பொதுமக்களுக்கு விதை பந்துகளையும், மரக்கன்றுகளை வழங்கி அசத்திய சூரியா ரசிகர்கள்.
சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீயின் மீது பேனர் விழுந்து லாரி மோதியதில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவத்திற்காக தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பல்வேறு கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி தொண்டர்களிடம் இனி கட்சி ரீதியாக எந்த பேனரும் வைக்க கூடாது என்று அறிவுறுத்தினார்.
இந்த விஷயம் தொடர்பாக "காப்பான்" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சூரியா தனது ரசிகர்களிடம் இந்த சம்பவத்தை பற்றியும் இனி பேனர்கள் வைக்க வேண்டாம் என்றும் கூறினார். மேலும் நீங்கள் அரசாங்க பள்ளிகளுக்கு செய்யும் உதவிகள், ரத்ததான நிகழ்ச்சிகள் போன்று நடத்துவதே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கேட்டுக் கொண்டார்.
1000 விதைப்பந்துகள், 500 மரக்கன்றுகள்
நேற்றைய நாளில் சூர்யாவின் “காப்பான்” படம் வெளியானது. இந்நிலையில் சூர்யாவின் அறிவுறுத்தலை கேட்டு அவரது விழுப்புரம் ரசிகர்கள் பேனர் எதுவும் வைக்காமல் அதற்கு பதிலாக திரையரங்கத்தில் படம் பார்க்க வந்த பொது மக்களுக்கு விதை பந்துகளையும், மரக்கன்றுகளையும் வழங்கி அசத்தி விட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நேற்று நடிகர் சூரியாவின் ரசிகர்கள் "காப்பான்" படம் வெளியானதை முன்னிட்டு சூரியாவின் பேனர்கள் எதுவும் வைத்து கொண்டாடாமல் அவரின் அறிவுறுத்தலை கேட்டு புதிய மாற்றமாக விதைப்பந்து இயக்கத்துடன் இணைந்து படம் பார்க்க வந்த பொது மக்களுக்கு 1000 விதைப்பந்துகளையும், 500 மரக்கன்றுகளையும் வழங்கி அசத்திவிட்டார்கள்.
இது குறித்து சூரியா ரசிகர் மன்றத்தை சேர்ந்த பார்த்திபன் கூறியதாவது, விதை பந்துகளையும், மரக்கன்றுகளையும் நாங்களே தயார் செய்து பொது மக்களுக்கு வழங்கி வருகிறோம், மேலும் இந்த மாற்றமானது விழுப்புரம் மாவட்டத்தில் மற்றும் நடக்காமல் தமிழகம் முழுவதும் நடந்தால் மிக சிறப்பாக இருக்கும் என்றார்.
K.Sakthipriya
Krishi jagran
Share your comments