1. செய்திகள்

இனிமே ரேஷன் கார்டு கேன்சல் ஆகாது: அரசு முக்கிய அறிவிப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
Ration card

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்காமல் இருந்தால் கார்டு ரத்து செய்யப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு பொது விநியோகத்திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.

ரேஷன் கார்டு (Ration Card)

ரேஷன் கடைகள் மூலமாக விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955ன் படி வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2.09.2022 முதல் 18.09.2022 வரையுள்ள ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற பத்து லட்சத்து இருபத்து ஏழாயிரத்து நானூற்று நாற்பது ரூபாய் மதிப்புள்ள, 1818 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசியும், அக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 52 வாகனங்களும் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன. அக்குற்றச் செயலில் ஈடுபட்ட 184 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தியும் வந்துள்ளது. அதாவது ரேஷன் வாங்காமல் இருந்தால் கார்டு ரத்து செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் ரேஷன் வாங்காமல் முடங்கிக் கிடக்கும் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று அஞ்சப்பட்டது. ஆனால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படாது என்று தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இனி கவலையில்லை

சமீப நாட்களாகவே, நாடு முழுவதும் கோடிக் கணக்கில் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஏனெனில், தகுதியற்றவர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதால் தகுதியுடையவர்களுக்கு உதவி கிடைக்காமல் போவதாகவும், ரேஷன் கார்டு பயன்பாட்டை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்பட்டது. இதனால் தங்களுடைய ரேஷன் கார்டும் ரத்து செய்யப்பட்டுவிடுமோ என்ற அச்சம் நிறையப் பேருக்கு இருந்தது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

மேலும் படிக்க

ஈசியா வாங்கலாம் கிசான் கிரெடிட் கார்டு: விவசாயிகளுக்கு நற்செய்தி!

ரேசன் கார்டில் மோசடி: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

English Summary: No more ration card cancellation: Government important announcement! Published on: 22 September 2022, 07:54 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.