தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் மழையுடன் வரும் 19 வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வருவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாலத்தீவு பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் ,உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் பகுதிகள்
-
15.01.2021 தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்
-
16.01.2021: தமிழகம் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
-
17.01.2021 & 18-01-2021: தமிழகம் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30டிகிரியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
மழை பெழிவு
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கன மழையும் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக பாபநாசம் ( திருநெல்வேலி ) 18 செமீ., மணிமுத்தாறு (திருநெல்வேலி ) 16செமீ., தூத்துக்குடி 11செமீ., அம்பாசமுத்திரம் ( திருநெல்வேலி ) 9செமீ., கடலாடி (ராமநாதபுரம் ), திருமயம் ( புதுக்கோட்டை ) தலா 8 செமீ., ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி ), பிளவக்கல் (விருதுநகர் ), தென்காசி ( தென்காசி ), அரிமளம் (புதுக்கோட்டை ), வலிநோக்கம் ( ராமநாதபுரம் ) தலா 7 செமீ., அளவு மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
ஜனவரி 14 லட்சத்தீவு, மாலத்தீவு சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், வடகிழக்கு பருவமழையானது தென் இந்திய பகுதிகளிலிருந்து இருந்து வருகின்ற 19ஆம் தேதி விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகிறது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
தமிழக தென் மாவட்டங்களில் பயிர் சேதங்கள் கணக்கெடுக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி!!
பொங்கல் பரிசு இன்னும் வாங்கவில்லையா? கவலைப்படாதீங்க! கால அவகாசம் நீட்டிப்பு!
வீடு கட்டுவோர்க்கு கூடுதல் உதவித் தொகை! தமிழக அரசு அறிவிப்பு!
வைப்பு நிதி முதலீட்டில் வட்டி குறைவு! நீண்ட கால முதலீட்டில் கவனம் செலுத்தும் நேரமிது!
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இலவச Wi-Fi வசதி! டெல்லி முதல்வர் அசத்தல்!
Share your comments