ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே மத்திய மாநில அரசுகளின் ரேஷன் தொடர்பான சலுகைகளைப் பெறமுடியும். ஆனால், மலிவு விலையில் உணவுப் பொருட்களை வாங்கி அவற்றைக் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யும் குற்றங்களும் அதிகமாக உள்ளன. இதனால் உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களுக்கு அரசின் சலுகைகள் கிடைப்பதில்லை. தகுதியுள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் போவதையும், தகுதியற்றவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதைத் தடுக்கவும் மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு ரேஷன் கார்டு விதிமுறைகளை மாற்றி வருகிறது.
ரேஷன் கார்டுகள் ரத்து (Cancellation of ration cards)
தகுதியற்றவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் இந்த விதிமுறைகள் உள்ளன. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் இனி ரேஷன் உதவி கிடைக்காது. தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மக்களுக்கும் உதவுவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். அதிக வசதி படைத்தவர்கள் இதைப் பயன்படுத்த முடியாது. எனவேதான் இந்த நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.
இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் ’ஒரு நாடு ஒரு ரேஷன்’ அட்டைத் திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ரேஷன் கார்டுகளைக் கொண்டு எந்த ஊரிலும் எந்தவொரு ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம். இத்திட்டம் தற்போது நாடு முழுவதும் வந்துவிட்ட நிலையில், ரேஷன் கார்டு விதிமுறைகளை அரசு கடுமையாக்கி வருகிறது.
தகுதியற்றவர்கள் (Ineligible)
சில வரையறைகளின் அடிப்படையில் ரேஷன் கார்டு வைத்திருப்போரின் குடும்ப வருமானம், வசதி போன்றவற்றை வைத்து தகுதியுடையவர்களுக்கு மட்டும் இனி ரேஷன் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான விதிமுறைகளும் அதற்கான அறிவிப்பும் இன்னும் தமிழக அரசிடமிருந்து வெளியாகவில்லை. உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் படிப்படியாக வந்து கொண்டிருக்கிறது. அந்த விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
கீழ்க்காணும் தகுதி உடையவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், 100 சதுர அடிக்கு மேல் புக்கா வீடு வைத்திருப்பவர்கள், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், வீட்டில் ஏசி, ஜெனரேட்டர் வைத்திருப்பவர்கள், 80 சதுர அடிக்கு மேல் தொழில் நிறுவனங்கள், ஆலை வைத்திருப்பவர்கள், நகர்ப்புறங்களில் குடும்ப வருமானம் ஆண்டுக்கும் ரூ.3 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள், ஆயுத உரிமம் வைத்திருப்பவர்கள்.
மேலே கூறப்பட்ட வரையறைக்கு உட்பட்டவர்கள் கண்டிப்பாக தங்களது ரேஷன் கார்டை சரண்டர் செய்ய வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் இவர்களின் ரேஷன் கார்டை அரசே ரத்து செய்துவிடும் என்று கூறப்படுகிறது. மற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம். ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக அரசிடமிருந்தோ மத்திய அரசிடமிருந்தோ இன்னும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
உயர்ந்து வரும் அரிசி விலை: ஜிஎஸ்டி வரியால் மேலும் உயர வாய்ப்பு!
பென்சன் தொகையை உயர்த்த பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரை!
Share your comments