1. செய்திகள்

Aadhar Linking : ஆதார் - மொபைல் எண் இணைப்புக்கு ஆவணங்கள் எதுவும் தேவையில்லை!!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit : New indian express

நாட்டின் மிக முக்கிய அடையாள அட்டையாக கருதப்படும் ஆதார் எண்ணுடன் நம் மொபைல் நம்பரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆவணங்கள் எதுவும் தேவையில்லை என்று ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆதார் அவசியம்

தனிநபர் அடையாள அட்டையாக விளங்கும் ஆதார் கார்டுகள் மத்திய-மாநில அரசின் அனைத்து வித நலத்திட்ட உதவிகளைப் பெற கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன. வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், புதிய மொபைல் எண் பெறுவதற்கும், பான் கார்டு வாங்குவதற்கும் உள்ளிட்ட தனிநபர் சார்ந்த அனைத்து கணக்குகளை தொடங்குவதற்கும் ஆதார் அட்டை அவசியமாக உள்ளது.

ஆதார் - பான் கார்டு இணைப்பு

குறிப்பாக வரி ஏய்ப்பைத் தடுக்கவும், கடன் மோசடிகளைக் குறைக்கவும் பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறாக தனிநபர் சார்ந்த அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண் அவசியமாக உள்ளது. ஆதாரில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்களது மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.

ஆதார் - மொபைல் எண் இணைப்பது எளிது

உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆதாரில் இணைக்கப்படாவிட்டால், நீங்கள் ஆதார் எண்ணை சரிபார்க்கவும் முடியாது. ஆதார் எண்ணில் மொபைல் எண்ணை இணைப்பது மிக எளிதான ஒன்றுதான். அருகிலுள்ள ஆதார் சேவா கேந்திரா மையங்களுக்கு சென்றும் இணைக்க முடியும். இதுகுறித்து UIDAI அமைப்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியாதெனில், மொபைல் நம்பரை ஆதாரில் இணைக்க எந்தவொரு ஆவணமும் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தை கண்டறிவது எப்படி?

ஆதார் சேவை மையங்களுக்கு ஆதார் கார்டை எடுத்துச் சென்று மொபைல் நம்பரை இணைக்கவோ அப்டேட் செய்யவோ முடியும். https://appointments.uidai.gov.in/easearch.aspx?AspxAutoDetectCookieSupport=1 என்ற முகவரியில் சென்று அருகிலுள்ள ஆதார் மையத்தை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளது. ஆதார் மையத்துக்குச் செல்வதற்கு முன்பாக ஆன்லைன் மூலமாகவே அப்பாயின்மெண்ட் பெற முடியும். ஆதார் அப்டேட்டுக்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க...

ஆன்லைனில் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்வது எப்படி...? - இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!

ஆதார் அட்டையில் எளிதாக புகைப்படம் மாற்றலாம்: UIDAI ஆதார் தகவல்களை புதுப்பிக்க இதோ எளிய வழி

English Summary: Now you can easily update aadhar card without any documents Published on: 27 January 2021, 10:43 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.