நாம் எடுத்து வைத்த ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும் என்றால், முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை வேறு ஒரு நபர் பயணம் செய்வது போல மாற்றியமைக்கலாம் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.
ரயில் பயணம் என்பது பாதுகாப்பானதாகவும், மிக குறைந்த விலையில் செல்லக்கூடிய ஒரு பயணமாகவும் இருக்கிறது. அத்தகைய ரயில் பயணங்களுக்கு வருடத்தில் ஒரு சில நாட்களுக்கு டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினமான ஒன்றாகதான் இருக்கிறது. இருப்பினும் குறிப்பிட்ட நாட்களுக்கு மேற்கொள்ள வேண்டிய ரயில் பயணத்துக்கு 2-3 மாதங்களுக்கு முன்னரே பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
அவ்வாறு முன்பதிவு செய்த ரயில் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட வேண்டிய சூழல் வரலாம். இத்தகைய சூழ்நிலையில் நம் ரயில் டிக்கெட்டை மற்றொரு நபருக்கு மாற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இப்போது பார்க்கலாம்.
இந்திய ரயில்வேயின் விதிகளின்படி, கடைசி நேரத்தில் ரயில் பயணம் ரத்து செய்யப்பட்டால், டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்றலாம். ஆனால் இந்த பரிமாற்றம் குடும்ப உறுப்பினர்களான பெற்றோர், சகோதரர், சகோதரி, மகன், மகள், கணவன், மனைவி இடையே மட்டுமே மேற்கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: PM Kisan: ரூ. 2000 பற்றித் தெரிந்துகொள்ள இந்த நம்பரை அழையுங்க!
வழிமுறைகள்
- முதலில் டிக்கெட்டின் பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
- டிக்கெட் கவுண்டரில் வாங்கியது என்றால் அதனை உடன் எடுத்துச் செல்லுங்கள்.
- இதற்குப் பிறகு உங்கள் அருகில் இருக்கக் கூடிய ரயில்வே முன்பதிவு மையத்திற்குச் செல்ல வேண்டும்.
- யாருடைய பெயரில் டிக்கெட்டை மாற்ற விரும்புகிறீர்களோ, அசல் ஆதார் அல்லது வாக்காளர் அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக, அவற்றின் புகைப்பட நகலையும் வைத்திருக்க வேண்டும்.
- அதன் பின்பு, கவுண்டரில் விண்ணப்பித்து டிக்கெட் பரிமாற்றத்தைக் மாற்றிக் கேட்கலாம். விண்ணப்பத்துடன் ஆதார் நகலை இணைக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: SBI வங்கியில் காலிப்பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்க!!
ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் அருகிலுள்ள ரயில்வே முன்பதிவு மையத்திற்குச் சென்று டிக்கெட் பரிமாற்ற விண்ணப்பத்தைக் கொடுத்தல் வேண்டும். இந்த விண்ணப்பத்துடன், நீங்கள் ரயிலில் உங்கள் இடத்திற்கு அனுப்ப விரும்பும் நபரின் ஆதார் அட்டையின் புகைப்பட நகலையும் இணைத்தல் வேண்டும்.
உங்களிடம் குடும்ப உறுப்பினரின் ஆதார் அட்டை இல்லை என்றால், வாக்காளர் அட்டையையும் எடுத்துச் செல்லலாம். அதன் பின்பு, பெயரில் உள்ள டிக்கெட்-ஆனது ரத்து செய்யப்பட்டு, குடும்ப உறுப்பினர் பெயரில் எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
Share your comments