தவிர்க்க முடியாத நேரங்களில், தகுந்த வகையில் உதவுவது எதுவென்றால் அது காப்பீடுதான். எத்தனையோ காப்பிடு நிறுவனங்கள், புதுப்புதுப் பாலிசிகளை அறிமுகம் செய்தாலும், மக்களின் அசைக்கமுடியாக நம்பிக்கை என்றால் அது LICதான். அதனால்தான் பல லட்சம்பேர், இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள்.
ஆண்டுதோறும் ப்ரிமியம் செலுத்தி ஆயுள் காப்பீடு செய்ய முடியாதவர்களுக்காக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு நிறுவனமான LIC.
ஜீவன் அக்ஷய்-7 என்ற இந்தத்திட்டத்தின்படி ஒரு முறை மட்டும் ப்ரிமியம் செலுத்தினால் போதும் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறலாம்.
சிறப்பு அம்சம் (Features)
-
LIC இந்தத்திட்டத்தினை கடந்த 24ம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது.
-
இது ஒரு வருடாந்திரத் திட்டம்.
-
பாலிசிதாரர்கள் விரும்பினால், ஓய்வூதியத்தை 3 மாதங்கள், 6 மாதங்கள் மற்றும் 12 மாதங்களுக்கு ஒரு முறையும் பெற்றுக்கொள்ளலாம்.
-
பங்குச் சந்தை சாராதத் திட்டம்.
எவ்வளவு செலுத்த வேண்டும்? (How much)
குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும். அதிகபட்சம், பாலிஸிதாரர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முதலீடு செய்யலாம். உச்சபட்ச வரம்பு கிடையாது.
தகுதி (Qualify)
குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 85 வயது உடையவர்கள் இந்த பாலிசியில் சேரத் தகுதி உள்ளவர்கள்.
கடன் வசதி உண்டு
இத்திட்டத்தின் சூப்பர் அம்சம் என்னவென்றால், இதன் கீழ்பாலிசிதாரர் கடன் பெறவும் வழிவகை செய்கிறது. எனவே, வருமானம் மட்டுமல்லாமல் கடன் பெறவும் பேருதவியாக இருக்கும்.
விருப்பத் தேர்வுகள்
இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், உயிர்வாழும் வரை ஓய்வூதியம் பெற முடிகிறது.
பாலிசிதார்கள் 10 விருப்பத் தேர்வுகளை பெற அனுமதிக்கப்படுகிறார்கள்.
அதில், உத்திரவாதம் அளிக்கப்பட்ட காலம் மற்றும் ஆயுள் உள்ளவரை உடனடி ஓய்வுதியம்,
5 மதல் 20 ஆண்டுகள் வரை உத்திரவாதம், அதற்கு பிறகான ஆயுள் வரை செலுத்தப்படும் தொகை அதிகமாக இருக்கும்.
Purchase Price கொள்முதல் விலையுடன் வருமானத்திற்கான உடனடி ஓய்வூதியம்
ப்ரிமியம் திரும்புவதோடு, வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் உள்ளிட்டவை இதில் அடங்கியுள்ளன.
மேலும் படிக்க...
வளர்ப்பு நாய்க்கும் இனி செலவில்லாமல் சிகிச்சை - பஜாஜ் அலையன்ஸின் புதிய காப்பீடு பாலிசி!
Share your comments