இந்தியர்கள் அனைவருமே ஆதார் - பான் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் - பான் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதி வரும் மார்ச் 31ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதார் - பான் இணைப்பு
ஆதார் - பான் கார்டு இணைப்பதற்கு 1000 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படுகிறது. வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் - பான் கார்டுகளை இணைக்காதவர்களின் பான் கார்டு செயலிழந்துவிடும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. பான் கார்டு செயலிழந்து விட்டால் வங்கி சேவைகளையோ, முதலீடு உள்ளிட்ட நிதி சார்ந்த பரிவர்த்தனைகளையோ மேற்கொள்ள முடியாது. எனவே, மார்ச் 31ஆம் தேதிக்குள் தவறாமல் ஆதார் - பான் கார்டு இணைக்கும்படி மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெரும்பாலான இந்திய குடிமக்கள் ஆதார் - பான் கார்டுகளை கட்டாயமாக இணைக்க வேண்டும். எனினும், சிலர் மட்டும் ஆதார் - பான் கார்டு கட்டாயமாக இணைக்க தேவையில்லை என மத்திய அரசு விலக்கு அளித்திருக்கிறது. அதன்படி, யாரெல்லாம் ஆதார் - பான் கார்டு இணைக்க தேவையில்லை என்பதை பார்க்கலாம்.
- அசாம், மேகாலயா, ஜம்மூ காஷ்மீர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள்.
- வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (NRI).
- 80 வயதை தாண்டிய சீனியர் சிட்டிசன்கள்.
- இந்திய குடிமக்கள் அல்லாமல் இந்தியாவில் வசிக்கும் நபர்கள்
இவர்கள் அனைவரும் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க தேவையில்லை. மற்ற அனைத்து இந்திய குடிமக்களுமே கட்டாயமாக ஆதார் பான் கார்டு இணைக்க வேண்டும்.
மேலும் படிக்க
அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி: பென்சன் விதியில் அரசு செய்த முக்கிய மாற்றம்!
இரயிலில் இரவு பயணம் செய்ய புதிய விதிமுறைகள்: IRCTC அறிவிப்பு!
Share your comments