1. செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பாறு அணை திறப்பு

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan
Opening of Bambaru Dam in Krishnagiri District

கிருஷ்ணகிரி பாம்பாறு நீர்தேக்கத்தின் மூலம் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் 16 கிராமங்களிலுள்ள 4000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் என கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வந்தனா அவர்கள் தகவல்.

கிருஷ்ணகிரி மாவட்டம்,ஊத்தங்கரை வட்டம் பாம்பாறு நீர்தேக்கத்திலிருந்து விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று பாசனத்திற்காக 4000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்  வகையில் 15.02.2023 முதல் 120 நாட்களுக்கான தண்ணீரை கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வந்தனா கார்க் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெரிவித்ததாவது,

பாம்பாறு நீர்த்தேக்கம் 1983ம் ஆண்டு கட்டப்பட்டது, பாம்பாறு நீர்தேக்கத்தின் முழு நீர் மட்ட உயரம் 19.68 அடி. இதன் முழு கொள்ளளவு 280 மி.க.அடி ஆகும். பாம்பாறு நீர்தேக்கத்திலிருந்து 2022-2023 ஆம் ஆண்டு (பசலி 1432) ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு பாசனத்திற்காக 15.02.2023 இன்று  முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் , ஊத்தங்கரை வட்டத்திலுள்ள மீட்டப்பள்ளி, ஓபகவலசை, போத்தராஜன்பட்டி, மூன்றம்பட்டி, கோட்டுக்காரன்பட்டி, கரியபெருமாள்வலசை, புளியம்பட்டி, எட்டிபட்டி, பாவக்கல், நல்லவம்பட்டி, நடுப்பட்டி, குப்பநத்தம் ஆகிய 12 கிராமங்களை சார்ந்த 2,501 ஏக்கர் நிலங்களும், தருமபுரி மாவட்டம், ஆரூர் வட்டத்திலுள்ள தா.அம்மாபேட்டை, வெடக்கட்டமடுவு, மேல்செங்கம்பாடி மற்றும் ஆண்டியூர் ஆகிய 4 கிராமங்களில் 1,499 ஏக்கர் என மொத்தம் 16 கிராமங்களிலுள்ள 4,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

எனவே, விவசாய பெருமக்கள் பொதுப்பணித்துறையினருடன் ஒத்துழைத்து நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற்று பயனடையுமாறு கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வந்தனா கார்க் அவர்கள் விவசாயிகளிடம்  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது, உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன், பொறியாளர் ஜெயக்குமார், வட்டாட்சியர் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ், சிவப்பிரகாசம், ஊராட்சி மன்ற தலைவர்கள் சின்னதாய் கமலநாதன், சத்தியவாணி ராஜா, கோவிந்தன், பூபாலன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஷ், மீனவர் சங்க பிரதிநிதி ரத்தினம் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், துறை சார்த்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க

2 லட்சம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அறுவடை இயந்திரங்கள் (ம) உரிமையாளர் விபரங்கள்: உழவன் செயலி பாருங்கள்!

English Summary: Opening of Bambaru Dam in Krishnagiri District Published on: 16 February 2023, 12:56 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.