கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்க இருக்கின்றன. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் வெளியூர் சென்று திரும்ப ஆரம்பிக்கும் நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாமல் இருக்கும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதனை முன்னிட்டுச் சிறப்பு பேருந்துகள் இயக்கப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு நாளும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதோடு, வார இறுதி நாட்களில் சென்னைக்கு 900 பேருந்துகளும், மற்ற மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு-க்கு 1300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2200 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இதேபோல், மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கு எனக் கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
தாமிரபரணி ஆறு: திருநெல்வேலியில் கழிவுநீர் சேகரிப்பு திட்டம்!
மேட்டூர் அணை நீர் திறப்பு! விவசாயிகள் விளைச்சலில் மும்முரம்!!
Share your comments