சென்னையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இணைந்தே பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராகவும், தம்மை கட்சியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்தார்.
இந்நிலையின் இன்று அவர் கூறிய தீர்ப்பில், ஜூன் 23ம் தேதிக்கு முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட கோரிக்கை விடுத்தால், 15 நாட்களுக்குள் நோட்டீஸ் வெளியிட்டு, 30 நாட்களில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும் படிக்க
Share your comments