நாளை பொங்கல் பண்டிகையை முன்னிட்டுப் பூக்களை வாங்க பூ மார்கெட்டில் சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் குவிந்துகொண்டு வருகின்றனர். மல்லி மற்றும் முல்லை பூ கிலோ ரூ.2000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.
தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் நிலையில் அதற்கு தேவையான பொருட்கள் மற்றும் பூஜை பொருட்களைப் பொதுமக்கள் வாங்கி வருகின்றனர். இதில் பூஜை செய்வதற்கு மிக முக்கியமாகப் பயன்படுத்தப்படும் பூக்களை வாங்க காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில் உள்ள பூ மார்கெட்டில் காலை முதலே சிறு வியாபாரிகள் பொதுமக்கள் அனைவரும் ஏராளமானோர் பூக்களை வாங்கிச் செல்வதற்காக குவிந்துள்ளனர்.
பூக்கள் வரத்து அதிகரித்து இருக்கின்ற காரணத்தால் வாசனைப் பூக்களைக் காட்டிலும் ரோஜா பூ கிலோ ரூ.250 முதல் ரூ.300-க்கும், சாமந்தி பூ ரூ.150 முதல் ரூ.200-க்கும், காகாட்டா மல்லி கிலோ ரூ.1000 முதல் ரூ.1200 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது. வாசனை பூக்களான மல்லிப்பூ ரூ.2000 மற்றும் முல்லைப்பூ ரூ.2000 என்ற அளவில் விற்பனையாகிறது.
மல்லிப்பூ, பிச்சிப்பூ ஆகியவற்றைத் தொடர்ந்து, முல்லைப் பூ, சம்பங்கி, செவ்வந்தி, கனகாம்பரம், ரோஜா, துளசிக் கட்டு ஆகியனவும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பூக்களின் விலை ஏற்றம் குறித்துப் பூ வியாபாரி கூறுவதாவது, நாளை சித்திரை முதல் நாள் என்பதால் இவ்விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது எனக் கூறுகிறார். அதோடு பூக்களின் வரத்துக் குறைவு காரணமாகவும் பிச்சி, மல்லிகை போன்ற பூக்களின் விலை அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது.
இத்தகைய விலையேற்றம் பூக்களை விளைவிக்கும் பூ விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது. விலையும் அதிகரித்து உள்ளது. விலை அதிகரித்தாலும் மக்கள் பூக்களை வாங்கிச் செல்கின்றனர். இந்த நிலை பூ வியாபாரிகளுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே பூக்களை ஏலம் மூலம் கொள்முதல் விலையில் வாங்கிச் சென்று வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும் அதிகப் பயனைத் தருவதாக இவ்விலை உயர்வு அமைந்துள்ளது.
மேலும் படிக்க
சுகர் இருப்பவர்களுக்கு எது நல்லது? மட்டனா Vs சிக்கனா!
Mutton Biryani: சுடச்சுட சுவையான மட்டன் கோலி பிரியாணி செய்முறை!
Share your comments