1. செய்திகள்

8ம் கட்டப் பேச்சு தோல்வி- பின்வாங்கப்போவதில்லை என விவசாயிகள் உறுதி!!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Phase 8 of the talks failed - Farmers assured that there was no going back
Credit : One India

வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க முன்வராததால், 8ம் கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.

தொடரும் போராட்டம் (Protest Continue)

புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் டெல்லியிலும், டெல்லியின் எல்லைப் பகுதிகளிலும் நடத்தி வரும் போராட்டம் 45வது நாளாக நீடித்து வருகிறது

2 விவகாரங்களுக்கு தீர்வு

இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஏற்கனவே மத்திய அரசு 7 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைகளில், இந்தச் சட்டங்களுக்காக விவசாயிகளை சமாதானப்படுத்தும் முயற்சிகளையே மேற்கொண்டதால் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

கடந்த மாதம் நடந்த 7ம் கட்டப் பேச்சுவார்த்தையில் மின்கட்டண விவகாரம். வேளாண் கழிவுகள் எரிப்பதற்கு அபராதம் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டது.இருப்பினும், முக்கிய கோரிக்கைகளான வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவது மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகியவற்றில் மத்திய அரசு பிடிகொடுக்காமல் இருந்து வருகிறது.

இதனால் கடந்த 4ம் தேதி நடந்த 7வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் நேற்று டெல்லி விஞ்ஞான் பவனில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமை யிலான குழுவினர், 40க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் 8ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால் 8ம் கட்ட பேச்சு வார்த்தையின் போதும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று தோமர் திட்டவட்டமாக தெரிவித்தார்.வேளாண் சட்டங்கள் பஞ்சாப், ஹரியானா மாநிலத்திற்கு மட்டும் அல்ல என்றும் வேளாண் சட்டங்கள் ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஆனது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

விவசாயிகள் உறுதி (Farmers commit)

அதேவேளையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகக் கூறினர்.

9ம் கட்ட பேச்சுவார்த்தை (Phase 9 negotiations)

இதனால், சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விவசாய பிரதிநிதிகள் - மத்திய அமைச்சர்கள் இடையே முட்டுக்கட்டை நீடித்ததால் 8ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து 9ம் கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 15ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது


எனினும், நீதிமன்றத்திற்கு செல்லப்போவதில்லை என்றும், அரசு சட்டங் களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் மத்திய அமைச்சர்கள் உடனான பேச்சுவார்த்தைக்கு பின் விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஹன்னன் மொல்லா தெரிவித்துள்ளார்.

ஆக புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய முடியாது என தொடர்ந்து மத்திய அரசு பிடிவாதம் காட்டி வருவதாலும், அதேவேளையில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் பின்வாங்க முடியாது என விவசாயிகள் உறுதியாக இருந்து வருவதாலும் எட்டாம் கட்டப் பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.  

மேலும் படிக்க...

உணவுப்பொருட்களில் கலப்படத்தைக் கண்டறிவது எப்படி? எளிய டிப்ஸ்!

யூரியாவைக் கட்டாயப்படுத்தி விற்பனை செய்திருந்தால், உரிமம் நிரந்தரமாக ரத்து!

காய்கறிகளுக்கு காப்பீடு - மார்ச் மாதம் வரை காலக்கெடு!

English Summary: Phase 8 of the talks failed - Farmers assured that there was no going back Published on: 09 January 2021, 09:05 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.