1.மின்தடை ஏற்பட்டால் புகார் அளிக்க வேண்டிய தொலைபேசி எண் குறித்து, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
தமிழ்நாட்டில் மின்தடை ஏற்படும் நேரத்தில், உடனே புகார் அளிக்க வேண்டிய தொலைபேசி எண் குறித்து, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சென்னையில் நேற்று முன்தினம், மின் நுகர்வு அதிகபட்சமாக 3991 மெகாவாட் என உச்சத்தை எட்டி உள்ளது. மேலும் சென்னையில் மின் தேவை எவ்வித தங்கு தடையின்றி பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 20.4.2023 அன்று 3778 MW என இருந்தது. மேலும் சென்னையில் மட்டும் மின் நுகர்வு 84.51 மி.யூனிட்கள் என நேற்று முன்தினம் (மே 15) பயன்படுத்தப்பட்டது.
இது மட்டுமில்லாமல் வீடுகளில் மின்தடை ஏற்பட்டால் 9498794987 என்ற எண்ணுக்கு உடனே அழைத்து புகார் அளிக்கலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
2.அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
3.40 காளான் விவசாயிகளுக்கு உதவித்தொகை
சமூக முதலீட்டு தளமான ரங் தே, மிஷன் சம்ரித்தியுடன் இணைந்து காளான் நிதியை தொடங்கியுள்ளது. அதனடிப்படையில் முதற்கட்டமாக, தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள 40 விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
காளான் வளர்ப்பு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். காளான் வளர்ப்பில் இருந்து நிலையான வருமானத்தை ஈட்ட, தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நிதி பெறப்படுகிறது.
4.ரேஷன் கடைகளுக்கு iso சான்றிதழ்
தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ரேசன் கடைகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில் கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ரேசன் கடைகளை அப்டேட் செய்யும் திட்டத்தினால் தற்போது பல ரேசன் கடைகள் புதுப்பிக்கப்பட்டு, சர்வதேச தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது.
5.ரயில்வே/வங்கி/எஸ்எஸ்சி தேர்வுகளுக்கான இலவச வகுப்புகள்
"ரயில்வே/வங்கி/எஸ்எஸ்சி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு” என்பது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவால் வடிவமைக்கப்பட்ட பயிற்சித் திட்டமாகும்.
இந்தப் பயிற்சித் திட்டத்தின் மூலம் தகுதியுடைய தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இலவச வகுப்புகள், தேர்வுகள், பாடப்புத்தகங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
1. தகுதி:
அ. குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை
முடித்திருக்க வேண்டும்.
ஆ. வயது எல்லை:
i. குறைந்தபட்சம் -21
ii அதிகபட்சம்-35 2. விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் விண்ணப்பிக்க
வேண்டும்.
https://candidate.tnskill.tn.gov.in
மேலும் படிக்க
Share your comments