ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. நாட்டு காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்க உள்ளோம் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் (Jallikkattu Guidelines)
இ-சேவை மையங்கள் மூலம் காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்கள் பதிவு செய்ய வேண்டும். தகுதியுள்ள காளை மற்றும் வீரர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும்.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க பதிவு செய்ய முடியும். பதிவு செய்தவர்கள் ஆன்லைனிலேயே அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரம் , பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய 3 போட்டிகளில் எந்த போட்டியில் பங்கேற்க வேண்டும் என வீரர்களும் , காளை வளர்ப்பவர்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
வீரர்களோ அல்லது காளைகளோ ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும்.
ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். கூடுதல் காளைகளுக்கு அனுமதி இல்லை. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ள காளைகள் நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளலாம். பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்படும். அடையாள அட்டை இல்லாதவர்கள் சோதனை சாவடியிலேயே திருப்பி அனுப்பி வைக்கப்படுவர்.
மேலும் படிக்க
Share your comments