1. செய்திகள்

அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை! கிராமுக்கு 68 ரூபாய் குறைந்தது.

Ravi Raj
Ravi Raj
Shocking Today's Gold Price..

தங்கம் என்பது நம் நாட்டு மக்களுடன் பின்னிப் பிணைந்த ஒன்று. பங்குச் சந்தையில் வாங்குதல் மற்றும் விற்பதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்காகவும், கௌரவத்தின் அடையாளமாகவும், ஒரு முதலீடாக வாங்குவதற்கு அழகுக்காக நகைகளை அணிய வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். அனைத்து சிறப்புகளிலும் தங்கம் விரும்பப்படுகிறது.

சர்வதேச காரணிகளால் தங்கத்தின் விலை சமீப காலமாக மிகவும் ஏற்ற இறக்கமாக உள்ளது. உக்ரைன்-ரஷ்யா விவகாரம் காரணமாக தங்கம் விலை உயர்ந்தது. இருப்பினும், மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில், இன்று தங்கத்தின் விலையில் நல்ல வீழ்ச்சியை காணக்கூடியதாக உள்ளது.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 68 ரூபாய் குறந்து 4,957 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 544 ரூபாய் குறைந்து 39,656 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது. 18 கார்ட தங்கம் ஒரு கிராம் ரூ. 4,061-க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை நிலவரம்:
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 73.50 ரூபாய்க்கும், வெள்ளி கிலோ 73,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. மேலும், செய்கூலி மற்றும் சேதாரத்தின் அடிப்படையில் கடைக்கு கடை தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.

உலகளாவிய சந்தைகளில் ஸ்திரமற்ற நிலை உள்ளததால், வர்த்தக நிபுணர்கள் தங்கத்தின் முதலீடு குறித்து இன்னும் குழப்பத்திலேயே உள்ளனர். ரஷ்யா உக்ரைன் போரால், பல வித அத்தியாவசிய பொருட்களோடு கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலையும் அதிகமாக உயர்ந்தது. இதன் தாக்கம் அனைத்து நாடுகளைப் போல இந்தியாவிலும் காணப்பட்கின்றது.

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி சற்று நிவாரணம் அளிக்கும் வகையில் உள்ளது.

மேலும் படிக்க:

தங்கம் விலை குறைந்துள்ளது, எவ்வளவு, விலை என்ன? விவரம் உள்ளே!

அதிரடியாக ஏறும் தங்கம் விலை, கிராம் முதல் சவரன் வரை தங்கம் விலை நிலவரம்!

English Summary: Pleasant shocking Gold Price! 68 less Per Gram. Published on: 20 April 2022, 12:57 IST

Like this article?

Hey! I am Ravi Raj. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.