1. செய்திகள்

வேளாண்துறையின் ஒவ்வொரு பிரிவிலும் தனித்த மேம்பாட்டு வளர்ச்சி அவசியம்! - பிதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

வேளாண்துறையில், கால்நடை, மீன்வளம், பால்வளம், தோட்டக்கலை, சிறு-குறு விவசாயிகள் உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவிலும் தனித்த மேம்பாட்டு வளர்ச்சி அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் தொடர்பான பட்ஜெட் விதிகளை திறம்பட அமல்படுத்துவது குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமர் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அரசின் தொலை நோக்கில் சிறு விவசாயிகள் முக்கியமான இடத்தில் இருப்பதை எடுத்துரைத்தார். சிறு விவசாயிகளை மேம்படுத்துவது, பல பிரச்னைகளில் இருந்து விவசாயத்துறை விடுபட மிகவும் உதவும் என்றார்.

வேளாண் துறைக்கு முன்னுரிமை

இந்த மத்திய நிதிநிலை அறிக்கையில், கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, மீன்வளத்துறைக்கு முன்னுரிமையுடன், வேளாண் கடன் இலக்கை ரூ.16,50,000 கோடியாக உயர்த்தியது, ஊரக கட்டமைப்பு நிதியை ரூ.40,000 கோடியாக உயர்த்தியது, சொட்டு நீர் பாசனத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கியது, அழிந்துபோகும் நிலையில் இருந்த தயாரிப்புகளுக்கு ஆபரேஷன் பசுமை திட்டத்தை விரிவுபடுத்தியது, மேலும் 1000 மண்டிகளை இ-நாம்-உடன் இணைத்தது போன்ற விவசாயத்துறையில் மேற்கொள்ளப்பட்ட சில முக்கிய விஷயங்களை அவர் சுட்டிக் காட்டினார்.

உணவுப் பதப்படுத்தும் கிடங்குகள்

உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், மீன்கள் போன்ற விவசாயம் தொடர்பான ஒவ்வொரு துறையிலும், பதப்படுத்துதலை மேம்படுத்த வேண்டும் என பிரதமர் வலுவாக வலியுறுத்தினார். இதற்கு, விவசாயிகளுக்கு, அவர்களின் கிராமங்களுக்கு அருகிலேயே சேமிப்பு கிடங்கு வசதிகள் இருக்க வேண்டியது அவசியம் என அவர் கூறினார். விவசாய உற்பத்தியை வயல்களில் இருந்து, பதப்படுத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லும் முறையில் முன்னேற்றம் தேவை என கூறிய பிரதமர், இந்த பதப்படுத்துதல் மையங்களை விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் வழிநடத்த வேண்டும் என வலியுறுத்தினார். நாட்டின் விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருளை விற்பதற்கான வாய்ப்புகளை விரிவாக்க வேண்டிய தேவையுள்ளது என அவர் வலியுறுத்தினார்.

ஒரு மாவட்டத்துக்கு ஒரு தயாரிப்பு

பதப்படுத்தப்பட்ட உணவுக்கான உலக சந்தைக்கு நமது நாட்டின் விவசாயத்துறையை நாம் விரிவாக்க வேண்டும். கிராமங்களுக்கு அருகிலேயே வேளாண் தொழிற்சாலை தொகுப்புகளின் எண்ணிக்கையை நாம் அதிகரிக்க வேண்டும்’’ என பிரதமர் கூறினார். இதில் ஆர்கானிக் தொகுப்புகள் மற்றும் ஏற்றுமதி தொகுப்புகள் முக்கிய பங்காற்றும் என அவர் கூறினார். வேளாண் பொருட்கள் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கும், தொழிற்சாலை தயாரிப்புகள் நகரங்களில் இருந்து கிராமங்களுக்கும் கொண்டுச் செல்லும் சூழலுக்கு நாம் செல்ல வேண்டும் என அவர் கூறினார். ஒரு மாவட்டத்துக்கு ஒரு தயாரிப்பு என்ற திட்டம் மூலம் நமது தயாரிப்புகளை உலக சந்தைக்கு கொண்டு செல்லும் வழிகளை ஆராய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

உணவுத்துறையில் சீர்திருத்தம் தேவை

மீன் பிடி தொழில் மற்றும் ஏற்றுமதியில் உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தாலும், பதப்படுத்தப்பட்ட மீன்களுக்கான சர்வதேச சந்தையில் இந்தியாவின் பங்கு குறைவாக உள்ளது என பிரதமர் வருத்தத்துடன் கூறினார். இந்த சூழலை மாற்ற, தயார் நிலை உணவுகள், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், பழங்கள், கடல் உணவுப் பொருட்கள் , பால் பொருட்கள் தயாரிப்பை ஊக்குவிக்க, சீர்திருத்தங்களுடன் ரூ.11,000 கோடி மதிப்பிலான உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்தை அரசு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆபரேசன் கிரீன்

ஆபரேசன் கிரீன்ஸ்’ திட்டத்தின் கீழ், காய்கறிகள் மற்றும் பழங்கள் போக்குவரத்துக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுவதாக அவர் கூறினார். கடந்த 6 மாதங்களில் மட்டும், சுமார் 350 கிசான் ரயில்கள் இயக்கப்பட்டதாகவும், இதன் மூலம் 1,00,000 மெட்ரிக் டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டன என அவர் கூறினார். ஒட்டு மொத்த நாட்டின் விவசாய உற்பத்தி பொருட்களுக்கும் குளிர்பதன கிடங்காக இந்த கிசான் ரயில் செயல்படுகிறது.

வேளாண்துறையில் தனியார் பங்களிப்பு

வேளாண்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில், தனியார் துறையின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார். கோதுமை மற்றும் அரிசி மட்டும் பயிரிடாமல், இதர பொருட்கள் உற்பத்தி செய்யும் வாய்ப்பையும் நாம் வழங்க வேண்டும் என அவர் மேலும் கூறினார். ஆர்கானிக் உணவு முதல், காய்கறிகள் வரை பல விவசாய உற்பத்தி பொருட்களை அவர் குறிப்பிட்டார். கடற்பாசி மற்றும் தேன் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இது விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு கூடுதல் வருமானத்தை அளிக்கும் என அவர் கூறினார். தனியார் துறை பங்களிப்பு அதிகரிப்பது, விவசாயிகளின் நம்பிக்கையை ஊக்குவிக்கும் என அவர் கூறினார்.

கடன் அட்டை திட்டம்

கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் கடன் அட்டை திட்டம், கால் நடை வளர்ப்போர், மீனவர்கள் என கொஞ்சம், கொஞ்சமாக விரிவுபடுத்தப்படுவதாகவும், கடந்த ஓராண்டில் 1.80 கோடி விவசாயிகளுக்கு, கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த 6-7 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒப்பிடும்போது, கடன் வசதிகள் இரண்டு மடங்குக்கு மேல் அதிகமாகியுள்ளன. நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள 1000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுடன் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், கூட்டுறவுகளை வலுப்படுத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மேலும் படிக்க...

One District One Focus Product: 728 மாவட்டங்களில் தலா ஒரு விவசாய பொருள் தேர்வு!!

English Summary: PM addresses webinar on effective implementation of Budget provisions regarding Agriculture and Farmers Welfare

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.