தமிழகத்தில் ஜன் தன் வங்கி கனக்கு வைத்திருக்கும் 1.22 கோடி பென்களுக்கு பயனாளிகளுக்கு இதுவரை ரூபாய். 610 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஜன் தன் திட்டம் : ரூ.610 கோடி
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமரின் கஃரிப் கல்யாண் திட்டத்தின் கீழ், ஜூன் 14-ஆம் தேதி வரை சுமார் 8.64 கோடி மக்களை சென்றடையும் விதமாக தமிழகத்திற்கு அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் ஜன தன் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் 1 கோடியே 22 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.500 வீதம் 3 மாதங்களில் ரூ.610 கோடி அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார் மேலும் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் ஜூன் 14 வரை தமிழகத்திற்கு இதுவரை 2,825 கோடி ரூபாய் உதவி வழங்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கொரோனாவுக்கு ரூ.6,600 கோடி
கொரோனாவுக்கு எதிரான சிகிச்சைக்கு வெண்டிலேட்டர்கள், மருத்துவ உபகரணங்கள், மாஸ்க் உள்ளிட்ட பொருட்களை வாங்க மத்திய அரசு இதுவரையில் தமிழகத்திற்கு ரூ.6,600 கோடியை வழங்கியுள்ளது என்றார்.
மேலும் அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டத்திலிருந்து ஜூன் 11 வரை தமிழகத்தில் சுமார் 47,000 சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு (MSME) 1,937 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நாடு முழுவதும் 14 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 6 ஆயிரம் மத்திய அரசு வழங்குகிறது. தமிழகத்தில் மட்டும் இதுவரை சுமார் 35 லட்சத்து 59 ஆயிரம் விவசாயிகள் இதில் பயன்பெற்றுள்ளனர்.
குறு-சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான கடன் வழங்கப்பட்டு வருகிறது. மீன்பிடிசார்ந்த தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, 2014 முதல் 2019 வரை சிறப்பாக ஆட்சி செய்தாதால் தான் தொடர்ந்து 2-வது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.
2014-ல் மோடி பிரதமரானதும் நகரங்களில் கிடைக்கும் இணைய வசதி அனைத்து கிராமங்களுக்கும் கிடைக்க முயற்சி மேற்கொண்டுள்ளார் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
PM Kisan: பி.எம்-கிசான் திட்டத்தில் அடுத்த தவணை பெற ஜூன் 30க்குள் பதிவு செய்யுங்கள்!
Share your comments