கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட உதவி வேளாண் பெண் அலுவலர் உட்பட நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசின் திட்டம்
பிரதமரின் கிசான் சம்மான் நிதி (PM-Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்த பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கான 6-வது தவணையை கடந்த ஆகஸ்ட் மாதம் விடுவிக்கப்பட்டது.
இத்திட்டத்தில், விவசாயிகள் போர்வையில், போலியான நபர்களை தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் சேர்ந்து முறைகேடு செய்திருப்பது அம்பலமானது. இந்த முறைகேடு தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, முறைகேடாக அளிக்கப்பட்டத் தொகை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
பிரதமரின் கிசான் திட்டத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விவசாயி அல்லாதவர்கள் போலியாக சேர்க்கப்பட்டிருப்பது குறித்து, விழுப்புரம் மாவட்ட, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த விசாரணையில், வல்லம் வட்டார உதவி வேளாண் அலுவலரான, திண்டிவனத்தைச் சேர்ந்த பிரியா, விவசாயி அல்லாதவர்களை கிசான் திட்டத்தில் இணைத்தது தெரிய வந்தது. இதேபோல், அணிலாடியைச் சேர்ந்த பிரிட்டாமேரி, ஹென்றி, கல்லடிக்குப்பத்தை சேர்ந்த ராமலிங்கம், புரோக்கர்களாக செயல்பட்டு, முறைகேடாக, 3,000 நபர்களை இத்திட்டத்தில் சேர்த்து உள்ளனர்.
4 பேர் கைது (Arrested)
இதையடுத்து, உதவி வேளாண் அலுவலர் பிரியா உள்ளிட்ட நான்கு பேரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
10 ஆயிரம் பேர் சேர்ப்பு
இதனிடையே பீகார், ராஜஸ்தானைச் சேர்ந்த வெளி மாநிலத்தவர்கள் 10 ஆயிரம் பேர் இந்தத் திட்டத்தில் தமிழக விவசாயிகளாகச் சேர்க்கப்பட்டிருப்பது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிசான் முறைகேட்டில், தோண்டத் தோண்ட இன்னும் பூதாரகமான தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
எந்தெந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை கொட்டும் - விபரம் உள்ளே!!
கோழிகளைத் தாக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய்- நிவாரணம் தரும் இயற்கை மருந்துவம்!
Share your comments