தமிழக விவசாயிகள் வாழ்வு மலர்ந்திட உணவு உற்பத்தி பெருகிட 50,000 கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் தொடக்க விழா இன்று, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தடா கோவில், அரவக்குறிச்சி கரூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இதன் முலம், விவசாயிகளின் வாழ்வு மலர்ந்திட உணவு உற்பத்தி பெருகிட 50,000 கூடுதல் மின் இணைப்புகள் வழங்கின.
2.PM Kisan திட்டம் பயன்பெற e-kyc புதுப்பிக்க காலக்கெடு!
பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தில் 13ஆம் தவணையிலிருந்து நிதித்தொகை தொடர்ந்து பெற விரும்பும் விவசாயிகள் உடனடியாக நவம்பர் 30-க்குள் PM-kisan -ekyc பதிவேற்றம் செய்ய வேண்டும் என வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பதிவேற்றம் செய்ய தங்கள் பகுதியில் உள்ள பொது சேவைமையம்/தபால் துறையை அணுகுவீர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் தவணை தொகைகள் அனைத்தும் ஆதார் எண் அடிப்படையிலே வழங்கப்படும். பயனாளிகள் அனைவரும் தங்கள் வங்கி கணக்கு உள்ள வங்கி கிளையை அணுகி வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பீர் எனவும் அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.தோட்டக்கலை துறை சார்பாக மலர்கள் சாகுபடி ரூ.60,000 வரை மானியம் அறிவிப்பு!
தமிழக விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதிலும், மக்களின் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதிசெய்வதிலும் அதிகளவு பங்குவகிக்கும் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு தோட்டக்கலை பயிர்களின் சாகுபடியினை ஊக்குவிப்பதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. அந்த வகையில், உதிரி மலர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.16,000/- மதிப்பிலான மலர் செடிகளும், கிழங்கு வகை மலர்களில், நடவுக்குப்பின் வயல்களை கள ஆய்வு செய்து பின்னேற்பு மானியமாக எக்டருக்கு ரூ.60,000/-ம், கொய்மலர் சாகுபடிக்கு எக்டருக்கு ரூ.40,000/-ம் மானியமாக வழங்கப்படுகிறது. மலர்கள் சாகுபடியில் அதிகபட்சமாக ஒரு விவசாயி இரண்டு எக்டர் வரை மானியம் பெறலாம் என்பது குறிப்பிடதக்கது. இதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை தமிழ் கிரிஷி ஜாக்ரன் வலைத்தளத்தில் பார்வையிடவும்.
4.சர்வதேச வேளாண் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி - 2022
உலகளாவிய விவசாயம் சமீபத்திய தசாப்தங்களில் பல்வேறு மாற்றங்களுடன் முழுமையான உருமாற்றத்தைக் கொண்டுள்ளது என்ற தலைப்பில், புது தில்லியில் உள்ள பூசாவில் உள்ள IARI மைதானத்தில் 3 நாள் கண்காட்சி நடைப்பெற்று வந்தது. இந்த 5வது இந்திய விவசாய உச்சி மாநாட்டின் தலைமை விருந்தினராக, - ஏ.பி. சிண்டே, கலந்து கொண்டு சிறப்பித்தார். மூன்றாவது நாளான இன்றுடன் இவ்விழா நிறைவுபெற்றது.
5.வானிலை தகவல்
கடந்த 24 மணி நேரமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்துள்ளது. காரைக்காலில் மிக லேசான மழை பெய்துள்ளது. நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும், எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு நாளை செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:
கலப்படம், கலப்படம், கலப்படம் கலப்படத்தை எப்படி அறிவது? சில வழிமுறை
Share your comments