1. செய்திகள்

PMEGP: 100 நாள் வேலை திட்டத்தில் ஒரு நாளைக்கு 600 ரூபாய் சம்பளம்!

Poonguzhali R
Poonguzhali R

PMEGP: 100 day job Scheme 600 rupees per day salary!

100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் எனவும், நாள் ஒன்றுக்கு ரூ. 600 ஊதியம் வழங்கிட வேண்டும்‌ எனவும் கோட்டூரில் நடைபெற்ற விவசாய தொழிலாளர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

கோட்டூர் விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய 29வது மாநாடு திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் நடைபெற்று முடிந்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வை.‌ சிவ‌புண்ணியம், கே. உலகநாதன் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்ட விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் விவசாயக் கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தியும், நாள் ஒன்றுக்கு ரூ 600 ஊதியத்தினை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும் எனவும், தொழிலாளர்களுக்கான மத்திய, மாநில அரசுகள் தனி சட்டம் இயற்றிட வேண்டும் எனவும், 60 வயதான விவசாய தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாத காலங்களில் அவர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பல நூறு ஆண்டுகளாகக் கோயில், மனை, மடம் மற்றும் அறக்கட்டளைக்குச் சொந்தமான இடங்களில் குடியிருந்து வருபவர்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மக்களுக்கு மாற்று வேலை என்று சொன்னால் 100 நாள் வேலைத்திட்டங்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டமே ஆகும். இருப்பினும், அந்தத் திட்டம் கூட மிகப்பெரிய அளவில் இன்று முடக்கப்பட்டு வருகிறது. அதற்கு வழங்கப்படுகின்ற நிதியை ஒன்றிய அரசு திட்டமிட்டு குறைத்துக் கொண்டு வருகின்றது.

அப்படி வழங்குகிற நிதியும் கட்டிடங்களாகவும், சாலைப் பணிகளாகவும், இன்றைக்கு ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்குகிற நிதியாக மறைமாற்றம் செய்யும் நிலை உள்ளது. ஏழைகளும்,‌ எளியவர்களும் , நேரடியாக பயன்படுகிற அளவிற்கு கௌவரவமாக உள்ளுரிலேயே வேலைவாய்பை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

மத்திய அரசின் இலவச உணவு தானிய திட்டம் கால நீட்டிப்பு!

Covid: கபசுர குடிநீரை வாங்க தமிழகத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை!

English Summary: PMEGP: 100 day job Scheme 600 rupees per day salary!

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.