PMFBY: Salem District Collector call for farmers to get crop insurance!
சிறப்புப் பருவ பயிர்களுக்கான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் செ. கார்மேகம், அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான செய்தியை இப்பதிவில் காணுங்கள்.
சிறப்புப் பருவ பயிர்களுக்கான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
PMFBY - பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்:
எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச்செய்து அவர்களை விவசாயத்தில் நிலைபெற செய்யவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில் வறட்சி, வெள்ளம், புயல், சூறாவளி காற்று, அதிக பரப்பளவில் பூச்சி நோய் தாக்குதல், நிலச்சரிவு மற்றும் இயற்கை சீற்றத்தினால் தீப்பிடித்தல் ஆகிய இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு பயிர் அறுவடை பரிசோதனை அடிப்படையில் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
சேலம் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்பாடு:
சேலம் மாவட்டத்தில் ஆகஸ்டு 2023 மாதம் முதல் சாகுபடி செய்யப்படும் நெல், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு தற்பொழுது விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். நடப்பு வருடம் இப்கோ டோக்யோ பொதுக் காப்பீட்டு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெல் (சம்பா) பயிருக்கு ஏக்கருக்கு ரூ.352 செலுத்தி 15.11.2023 வரையிலும், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு முறையே ரூ.480, ரூ.674 செலுத்தி 31.10.2023 வரையிலும் பயிர் காப்பீடு செய்யலாம்.
மேலும் படிக்க: Today's Agri News: PM Kisan AI Chatbot | இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட இழப்புக்கு நிதி ஒதுக்கீடு!
யாரை அணுக வேண்டும்?
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகலாம்.
விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய தேவைப்படும் ஆவணங்கள்:
விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய
- அடங்கல்,
- நில உரிமை பட்டா,
- ஆதார் அட்டை நகல்
- நடப்பில் உள்ள சேமிப்பு வங்கி கணக்கு புத்தகம் நகல் மற்றும்
- உரிய பிரீமியத் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்துக்கொள்ளலாம்.
இதன் மூலம், இடர்பாடு ஏற்படும் காலத்தில் பயிர் காப்பீட்டுத் தொகை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு உழவன் செயலி மற்றும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மைத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் செ. கார்மேகம், அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
ட்ரோன் வாங்க 4லட்சம் மானியம்: வேளாண் அமைச்சர் MRK பன்னீர்செல்வம் அறிவிப்பு!
Share your comments