1. செய்திகள்

கதிரவனுக்கும், கால்நடைகளுக்கும் பொங்கலிட்டு நன்றி தெரிவிக்கும் தமிழர்கள் திருநாள்

KJ Staff
KJ Staff
Pongal Celebration

மாசு இல்லா போகி கொண்டாடுவோம்

உலகமெங்கும் உள்ள தமிழர்கள் சாதி, மத, இன பேதங்களுக்கு அப்பாற்பட்டு கொண்டாடும் திருநாள்களில் ஒன்று, பொங்கல் திருநாள். உலகம் வியந்து பார்க்கும் அளவிற்கு அதிசயத் தன்மைகள் இந்த பொங்கல் பண்டிகைக்கு உண்டு. மண்ணை பண்படுத்த விவசாயிகளுக்கு உதவும் கால்நடைகளுக்கும், விதையை விண்ணோக்கி எழச் செய்யும் கதிரவனுக்கும் பொங்கலிட்டு நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர், தமிழர்கள்.

பொங்கல் பண்டிகை

அறுவடைத் திருநாள், தமிழர் திருநாள், உழவர் திருநாள் என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த பொங்கல் கொண்டாட்டங்கள் நான்கு நாட்கள் கடைபிடிக்கப்படுகின்றன. பண்டிகையின் முதல் நாள் போகிப் பண்டிகை, அடுத்த நாள் வாசல் பொங்கல், சூரிய பொங்கல் அல்லது கதிரவன் பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல், நான்காம் நாள் கரிநாள் அல்லது திருவள்ளுவர் நாள் என விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

போகி பண்டிகை

போகி பண்டிகையான இன்று பழையன கழிந்து புதியன புகுதல் என்கிற ஒப்பில்லா கொள்கையின் நீட்சியாய் தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை எல்லாம் தீயிட்டு கொளுத்துவார்கள். வீட்டிற்கு வெள்ளையடித்து மகிழ்கின்றனர். இன்றைய தினம் தங்களுடைய வீடுகளில் உள்ள எல்லா பழைய கழிவுகளையும் கழித்து அறுவடையாகி இருக்கின்ற புதுநெல்லை வீட்டுக்கு கொண்டு வருவதற்கு ஆயத்தமாகின்றனர்.

இன்றைய போகி

பண்டைய தமிழர்கள் கொண்டாடிய போகிப் பண்டிகை இன்றும் பழமை மாறாமல் சில பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டங்கள் சில எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதை மறுக்கமுடியாது. இன்று நம்முடைய வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் காற்று மிக மோசமான அளவிற்கு மாசடைகிறது. இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதோடு, புகைமூட்டதால் போக்குவரத்து நெரிசல், விமான சேவையில் பாதிப்பு போன்ற பாதக அம்சங்களுக்கும் வழிகோலுகிறது.

Pride of our Tradition

கால்நடைகளில் பாதிப்பு

இந்த புகை மூட்டத்தால் மூச்சுக் கோளாறு, கண் எரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மூச்சுக் குழல் தொற்று உள்ளவர்கள் தீவிர மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இந்த பாதிப்புகளுக்கு கால்நடைகளும் விதிவிலக்கு அல்ல. கால்நடைகளும் இது போன்ற பாதிப்புகளுக்கு விதிவிலக்கல்ல. புகை மூட்டத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளால் கால்நடைகளில் நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. கண் எரிச்சல், மூச்சுக் கோளாறு ஏற்படும். பறவைகள் மற்றும் இளம் கன்றுகள்/குட்டிகளில் அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்த பாதிப்புகள் குறித்து அறிந்து சுற்றுச்சூழலுக்கும் கால்நடைகளுக்கும் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் போகியை கொண்டாடுவோம். நமது கொண்டாட்டங்கள் பிறருக்கு வேதனையை கொடுக்காமல் இருப்பதே நாம் கொண்டாடும் பண்டிகைகளின் உண்மையான அர்த்தமாகும். மாசு இல்லாத போகி; யாருக்கும் கேடு இல்லாத போகி...

சி. அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், 
சென்னை-07

Dr. ச. பாவா பக்ருதீன்
கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி,
குரு அங்கத்தேவ் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
லூதியானா, பஞ்சாப்-141001

English Summary: Pongal 2020: Festivals of Harvest, On this day farmers Thank Sun God and Livestock Published on: 14 January 2020, 04:15 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.