கூட்டுறவுத் துறையின் கீழ் மாநில, மாவட்ட மத்திய மற்றும் நகரங்களில் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவை குறைந்த வட்டியில் தங்க நகைகளுக்கான அடமான கடன்களை வழங்குகின்றன. இதன் மூலம் ஏழை, எளிய குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன.
இதற்கிடையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில்போது, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. இது தொடர்பான அறிவிப்பை கடந்த செப்டம்பர் மாதம் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது விதி எண் 110இன் கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். ஆனால், இது தொடர்பான அரசாணை வெளியிடப்படாமல் இருந்தது. மேலும், நகைக்கடன் பெறுவதில் கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றதாகவும் தமிழக அரசு குற்றம் சாட்டி வந்தது.
இந்த நிலையில், கூட்டுறவு வங்கிகளில் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பமும் பெற்ற 5 சவரன், அதாவது 40 கிராம் வகையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்வது தொடர்பான அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. இதன் மூலம், தமிழ்நாட்டில் நகையை அடமானம் வைத்து கடன் பெற்ற 16 லட்சம் பேர் பலனடைவர் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:
Share your comments