வருகின்ற தைப்பொங்கலை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பின் ரூ.1000 (ஆயிரம் ரூபாய் பணம்) குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.
இந்த பணம் ரேஷன் அட்டை தாரர்களுடைய வங்கிக்கணக்கில் செலுத்தப்பட இருக்கிறது. ஆகையால் ரேஷன் அட்டை தாரர்கள் தங்களது ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவருடைய கீழ்கண்ட ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
1) வாங்கி கணக்கு (பாஸ் புக் ) புத்தகத்தின் முதல் பக்கம் மற்றும் இரண்டாவது பக்கத்தின் ஜெராக்ஸ். ( அக்கௌன்ட் நம்பர் தெளிவாக தெரியும்படி இருக்க வேண்டும் )-1.
2).ஆதார் அட்டை ஜெராக்ஸ்-1.
3)ரேஷன் கார்டு ஜெராக்ஸ்-1.
மேற்கண்ட ஆவணங்களை அவரவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்கும் ரேஷன் கடைகளில் 10.12.2022-க்குள் கொடுத்துவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் வங்கியில் அக்கௌன்ட் இல்லாதவர்கள் தங்களுடைய
1) ஆதார் அட்டை ஜெராக்ஸ்-1.
2)ரேஷன் கார்டு ஜெராக்ஸ் -1.
3) தங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ -3 போட்டோ.
ஆகியவற்றை கூட்டுறவு வங்கியில் கொடுக்குமாறும் அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அவ்வாறு கொடுக்கும் ரேஷன் அட்டை தாரர்களுக்கு...பணம் ஏதும் கட்டாமல் Zero ( ஜீ ரோ )பேலன்ஸ் அக்கௌன்ட் துவங்கப்பட்டு (ஓபன் செய்யப்பட்டு ) அந்த வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் படிக்க
Rationcard: வங்கி கணக்கு இல்லாத ரேஷன் அட்டைகள்: கூட்டுறவுத்துறை முக்கிய அறிவிப்பு!
Share your comments