Powerful countries in Asia: India in 4th place!
ஆசியாவின் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா சிட்னியின் லோவி நிறுவனம், ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் 2021 ஐ வெளியிட்டு உள்ளது. முக்கிய நாடுகளின் பொருளாதார திறன், ராணுவத் திறன், உள்நாட்டு நிலைமை, எதிர்கால திட்டமிடல், பிற நாடுகளுடனான பொருளாதார உறவுகள், பாதுகாப்பு வலையமைப்பு, அரசியல், ராஜதந்திர செல்வாக்கு, கலாச்சார செல்வாக்கு ஆகியவற்றை ஆய்வு செய்து லோவி நிறுவனம் ஆண்டுதோறும் இப்பட்டியலை வெளியிடுகிறது.
4வது இடத்தில் இந்தியா (India in 4th Place)
ஆசியாவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிடி தளர்கிறது. சீனாவின் பிடி அதிகரித்து வருகிறது. இப்பட்டியலில் அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. 2020ஐ விட இந்தாண்டு இந்தியா 2 புள்ளிகள் இழப்பை சந்தித்துள்ளது.
இந்தியா அதன் எதிர்மறையான சக்தி இடைவெளி மதிப்பெண் காரணமாக இந்த துறையில் முன்பை விட குறைவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எதிர்கால வளங்களின் அளவீட்டில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. கொரோனா வைரஸ், ஊரடங்கு காரணமாக 2030 ஆண்டிற்கான குறைந்த பொருளாதார முன்னறிவிப்பு இருந்த போதிலும் இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனாவுக்குப் பின்னால் உள்ளது. பொருளாதார திறன், ராணுவ திறன் மற்றும் கலாச்சார செல்வாக்கு அடிப்படையில் நான்காவது இடத்தில் உள்ளது.
கொரோனாவால் இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. ஆசியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இப்போது நடுத்தர சக்தி பட்டியலுக்கு மாறியுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளை விட கொரோனாவால் இந்தியா வளர்ச்சிக்கான திறனை அதிகம் இழந்துள்ளதாக அறிக்கை கூறியுள்ளது.
இப்பட்டியலில் பாகிஸ்தான் 14.7 புள்ளிகளுடன் 15வது இடத்திலும், வங்காளதேசம் 9.4 புள்ளிகளுடன் 19வது இடத்திலும் உள்ளன. 20வது இடத்தில் உள்ள இலங்கை, 8.6 என்ற புள்ளியை பெற்றுள்ளது. மியான்மர் 7.4 புள்ளிகளுடன் 21வது இடத்திலும், நேபாளம் 4.5 புள்ளிகளுடன் 25வது இடத்திலும் உள்ளன.
புள்ளிப்பட்டியல் (Points table)
அமெரிக்கா 82.2
சீனா 74.6
ஜப்பான் 38.7
இந்தியா 37.7
ரஷ்யா 33.0
ஆஸ்திரேலியா 30.8
தென்கொரியா 30.0
சிங்கப்பூர் 26.2
இந்தோனேசியா 19.4
தாய்லாந்து 19.2
மேலும் படிக்க
Share your comments