1. செய்திகள்

தினை வகைகளில் பேக்கரி பொருட்கள் தயாரித்தல்- சென்னையில் 4 நாள் பயிற்சி

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
millet varieties bakery products

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 4 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி வரும் 28.01.2025 முதல் 31.01.2025 தேதி வரை காலை 9.30 மணி முதல் மதியம் 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் பேக்கரி பொருட்களின் ராகி நெய் குக்கீகள், சத்துமாவு குக்கீகள், கோதுமை தேங்காய் குக்கீகள், முத்து சோக்கோ தினை குக்கீகள் (கம்பு), கோடோ முந்திரி தினை குக்கீகள் (வரகு), சிறிய முந்திரி தினை குக்கீகள் (சாமை), சோளம் பிஸ்தா குக்கீகள் (சோலம்), பர்னார்ட் ஜீரா குக்கீகள் (குதிரைவாளி), மசாலா குக்கீகள், முழு கோதுமை ரொட்டி, பழ ரொட்டி, ராகி தினை ரொட்டி, பல தானிய ரொட்டி, ராகி சாக்கோ ரொட்டி, ராகி பிரவுனி தயாரிப்பு குறித்து பயிற்சி வழங்கப்படவுள்ளது.

மானியத் திட்டங்கள் குறித்தும் விளக்கம்:

குதிரைவாலி தினை பிரவுனி, கருப்புகவுனி தினை பிரவுனி, பல தினை வால்நட் பிரவுனி, டேட்ஸ் தினை பிரவுனி, கோதுமை பிளம் கேக், ராகி சாக்லேட் கேக், ஜோவர் கேரட் கேக் (Cholam cake), ஃபாக்ஸ்டெயில் மற்றும் டேட்ஸ் கேக் (தினை), வாழைப்பழம் வால்நட் கேக், தினை வெல்லம் வெண்ணெய் கேக், முழு கோதுமை பீட்சா, முழு கோதுமை பூண்டு ரொட்டி, ராகி கருப்பு காடு கேக், பட்டர்கிரீம் ஃப்ரோஸ்டிங்குடன் தினை வெண்ணிலா கேக் வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள்.

மேலும் தயாரிப்பு சந்தைப்படுத்துதலின் அம்சங்கள் பேக்கிங் லேபிளிங் மற்றும் அதற்காண விலை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.

பயிற்சிக்கு முன்பதிவு அவசியம்:

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம். மேலும், பயிற்சியின் நிறைவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் பின்வருமாறு-

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032. 8668102600 / 7010143022.

Read more:

1176 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்- 5.48 லட்சம் மெ.டன் நெல்: அரசு கொடுத்த அப்டேட்

பயிர் விளைச்சலை 50% அதிகரிக்கும் பாக்டீரியா- ஐஐடி பம்பாய் ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்

English Summary: Preparation of bakery products from millet varieties on 4 day training in Chennai Published on: 21 January 2025, 01:17 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.