இதய நோய் காரணமாக டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை பெற்று வரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு 30ம் தேதி இதய அறுவைசிகிச்சை (Bypass- procedure)மேற்கொள்ளப்பட உள்ளது.
மருத்துவமனையில் அனுமதி (Admitted to hospital)
டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு நேற்று வழக்கமான உடல்நல பரிசோதனைக்காக சென்ற , ராம்நாத் கோவிந்த், லேசான இதய பிரச்னைகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குடியரசுத்தலைவருக்கு, மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
ராணுவ மருத்துவமனை பரிந்துரை (Military hospital recommendation)
இதைத்தொடர்ந்து, ராணுவ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், குடியரசுத் தலைவர் ராம்நாத்தின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரை செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
30ம் தேதி அறுவைசிகிச்சை (Surgery on the 30th)
இதன் அடிப்படையில் , ராம்நாத் கோவிந்த் இன்று, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு வரும் 30ம் தேதி அவருக்கு பைபாஸ் புரொசிஜர் (By-Pass Procudure) செய்யப்பட உள்ளதாக குடியரசுத்தலைவர் மாளிகைத் தகவல் வெளியிட்டுள்ளது.
வங்கதேசத்திற்கு 2 நாள் அரசுமுறைப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ராம்நாத் கோவிந்தின் மகனிடம், குடியரசுத் தலைவரின் உடல்நிலை குறித்து நேற்று கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
கடன்களிலிருந்து எப்படி வரியை சேமிக்கலாம்! சில உதவிக்குறிப்புகள்.!
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி? இலவச வெபினாரை வழங்குகிறது தினமலர்!
வீட்டுக் கடன் வாங்கியிருக்கீங்களா? 6 மாதம் EMI தள்ளுபடி- LIC அதிரடி அறிவிப்பு!
Share your comments