பிரமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 8.5 கோடி விவசாயிகளுக்கு 6-வது தவணையாக ரூ. 17,000 கோடி நிதியை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார்.
வேளாண் கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மத்திய நிதி வசதித் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
PM-Kisan திட்டம்
அப்போது பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) எனப்படும் பிரதமரின் விவசாய நிதித் திட்டத்தீன் கீழ் விண்ணப்பித்த 8.5 கோடி விவசாயிகளுக்கு 6-வது தவணையாக ரூ.17 ஆயிரம் கோடி வழங்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்துள்ளார்.
இது குறித்து காணொலி காட்சி வழியே பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஒரே தவணையில் நாட்டிலுள்ள 8.5 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.17 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டு உள்ளது.
இடைத்தரகர்களோ அல்லது கமிஷனோ இல்லாமல் நிதியானது நேரடியாக விவசாயிகளை சென்றடைந்து உள்ளது. இதனால் நான் திருப்தியடைந்து உள்ளேன். இதன் மூலம் இந்த திட்டத்தின் சாராம்சம் பூர்த்தி அடைந்து உள்ளது என்றார்.
இந்த திட்டம் தொடங்கப்பட்ட 2018 டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இதுவரையில் நாடு முழுவதும் உள்ள 10 கோடி விவசாயிகளுக்கு மொத்தம் 90,000 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது
மேலும் படிக்க..
விவசாயிகள் கடன் பெற உதவும் கிசான் கிரெடிட் கார்டு! - விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசின் மானியத் தகவல்கள் அனைத்தும் உங்கள் கைகளுக்குக் கொண்டு வரும் "PM Kisan Mobile App"!!
PM-Kisan திட்டம் : உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லையா? - விபரங்கள் இதோ!!
Share your comments