கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல் டீசல் விலை மாதத்திற்கு இரு முறை தீர்மானிக்கும் முறை நடந்து வந்தது. உணவு உடையை போல் மக்களுக்கு பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருட்களும் அத்தியாவசமாக மாறிவிட்டன. உலக அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
ஆனால் இந்த முறை 15 ஆண்டுகளாக இவ்வாறு நடைமுறையில் இருந்தது. அதனை தொடர்ந்து தினமும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் இதனை எண்ணெய் நிறுவனங்களின் பொறுப்பில் விடப்பட்டது. தற்போது பெட்ரோல் டீசல் விலை எண்ண முடியாத அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. காய்கறி மற்றும் மற்ற பொருட்களின் விலையும் பெட்ரோல் டீசல் விலையோடு உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலை மாறாமல் லிட்டருக்கு ரூ.102.49 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக குறைந்த விலைக்கு பெட்ரோல் போடும் வசதி வந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனமும் சேர்ந்து புதிய கிரெடிட் கார்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. இந்த கிரெடிட் கார்டை பயன்னடுத்தி வாடிக்கையாளர்கள் குறைந்த விலைக்கு பெட்ரோல் போட்டுக்கொள்ளலாம். அதாவது குறைந்த விலைக்கு பெட்ரோல் போடலாம் என்பது கேஷ் பேக் சலுகை. விளக்கமாக பார்த்தோமானால் இந்த கிரெடிட் கார்டை வைத்து முதலில் பெட்ரோலின் அசல் விலைக்கு போட வேண்டும். கார்டை பயன்படுத்தினால் கேஷ் பேக் சலுகை கிடைக்கும். இதுமட்டுமல்லாமல், இந்த கார்டை வைத்து மொபைல் ரீசார்ஜ் செய்தால் அதற்கான தள்ளுபடி சலுகையும் வழங்கப்படுகிறது.
குறிப்பாக ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HP) பெட்ரோல் நிலையங்களில் மட்டுமே இந்த கார்டை பயன்படுத்தி பெட்ரோல் – டீசலுக்கான சலுகையை பெறலாம். இந்த கார்டைப் பெறுவதற்கு நீங்கள் ஐசிஐசிஐ வங்கியின் இண்டர்நெட் பேங்கிங் அல்லது imobile pay மொபைல் ஆப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த தகவல் குறித்த அறிவிப்பை அதாவது சலுகை குறித்து ஐசிஐசிஐ வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மொபைல் பில், பல்பொருள் அங்காடி, ஆன்லைன் ஷாப்பிங், எரிபொருள், மின்சாரம், போன்ற பல்வேறு அத்தியாசிய தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க:
Share your comments