தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறிபிட்ட ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வருகின்ற 25.06.2022 முதல் 28.06.2022 வரை தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு!
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்குற்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்: HRA உயர்கிறது!
மீனவர்களுக்கான எச்சரிக்கை எனப் பார்க்கும் போது இன்றான 24.06.2022 முதல் 28.06.2022 வரையில் இலட்சத்தீவு பகுதி, கேரளா - கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக் கூடும். அதிலும், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்வீசக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 10, +12 மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறத் தேதி அறிவிப்பு!
24.06.2022. 25.06.2022: குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழகக் கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 35 முதல் 45 இலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு இருக்கின்றது. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
என்னது திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டமா? குட் நியூஸ்!
7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் உயர்வு!
Share your comments